சென்னை மாநகராட்சியில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் திரு L. நந்தகுமார் இந்த மாதம் இறுதியில் 31.05.2023 அன்று ஓய்வு பெற உள்ளார்.
அவரது ஊழல்கள் பற்றியும், அதன் மீது அறப்போர் கொடுத்த புகார்கள் குறித்தும், லஞ்ச ஒழிப்பு துறை மேற்கொண்டு வரும் விசாரணை குறித்தும் விவரித்து, அவரை உடனடியாக பணி இடை நீக்கம் செய்ய வேண்டும்.
என்று அறப்போர் இயக்கம் இன்றைய தினம் முதல்வர், தலைமை செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் மற்றும் இணை இயக்குனர்களுக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளோம்.
அதன் நகலை இத்துடன் இணைத்துள்ளோம். அவர் மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடைபெறும் இந்த நேரத்தில், அவர் உடனடியாக பணி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் விசாரணைக்கு பிறகு பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுள்ளோம்.
ஜெயராம் வெங்கடேசன்
ஒருங்கிணைப்பாளர் – அறப்போர் இயக்கம்
Ph: 9841894700