chennireporters.com

ஆந்திராவில் குவியும் கொரோனா நோயாளிகள்..

கொரோனாவின் தாக்கத்தால் உலகமே பயந்து கொண்டு இருக்கிறது.மக்கள் தங்களது உறவுகளை இழந்து வருகின்றனர்.ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

சித்த மருத்துவர் ஆனந்தையா

உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என பல மாநிலங்களில் மரண ஓலங்கள் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

உத்திரப்பிரதேசத்தில் பிணங்கள் கங்கை நதியில் கொட்டப்படுகிறது.
அங்கு பிணங்கள் குவியல் குவியலாக புதைக்கப்படும் எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவிற்கு கொடுக்கப்படும் மருந்து

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கிருஷ்ணா பட்டினம் என்ற இடத்தில் ஆனந்தையா என்கிற சித்த மருத்துவர் கொரோனாவிற்கு மருந்துதருகிறார்
என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவியது.
தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து வரும் நோயாளிகள் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேறி கிருஷ்ணா பட்டினத்திற்கு சென்றுவிட்டனர்.

பெரும்பாலான மருத்துவ மனைகள் காலியாகவே இருக்கிறது.ஏறக்குறைய இரண்டு லட்சம் பேர் வரை அங்கு மருந்து வாங்க நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

நாளொன்றுக்கு 3 ஆயிரம் பேருக்கு மருந்து கொடுக்கப்படுகிறது.இவர் கொடுக்கும் மருந்து எந்த விதமான பக்க விளைவுகள் இல்லாமல் இரண்டே நாளில் கொரோனாவை சரி செய்து விடுகிறது.

இவர் தரும் மருந்து தரமானதுதானா நோயைக் கட்டுப்படுத்தும் குணம் கொண்டது தானா என்று அந்த மருந்து  அதை சோதனை செய்து ஆய்வு அறிக்கை தரமத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இருப்பினும் நாடெங்கும் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் கிருஷ்ணா பட்டினத்திற்கு மருந்து வாங்க சென்று கொண்டு தான் இருக்கின்றார்கள்.

இதையும் படிங்க.!