தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு தான் பணி ஓய்வு பெற்ற நாளில் கல்வித்துறை இயக்குனருக்கு பரபரப்பான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வாசிப்பு பழக்கம் மாணவர்களிடையே குறைந்துவிட்டது. ஏன் சுத்தமாக வாசிப்பு பழக்கமே இல்லாமல் போய்விட்டதே;
எனவே களத்தில் இருக்கும் ஆசிரியர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் தினமும் மாணவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தித் தர ஒத்துழைப்பு தர வேண்டும். இதை ஒரே சடங்காக இல்லாமல் உண்மையான வார்த்தைகளாக முழுமனதுடன் கல்வித்துறை அதிகாரிகள் காது கொடுத்து மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற பாடுபட வேண்டும். இந்த கடிதம் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
இது தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இறைஅன்பே கூறியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் அன்பார்ந்த முனைவர் அருளி அவர்களுக்கு மாணவர்கள் மின்னணு உபகரணங்களை அதிகமாக வாசிப்பதால் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பொது அறிவு தொடர்பான செய்திகள் அவர்களுக்கு அதிகமாக தெரிவதில்லை.
வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்போர் மன்றம் ஒன்றை ஏற்படுத்தலாம். அதில் மாதந்தோறும் மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களை பற்றி பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் வாசிப்பது மட்டுமில்லாமல் தகவல் தொடர்பிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு சாத்தியக்கூறுகள் ஏற்படும் சிறந்த முறையில் நூலை மதிப்புரை செய்கிற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதோடு இதில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல புத்தகங்களை கொடுத்து ஊக்குவிக்கலாம்.
இது அவர்களிடமும் சமூகம் தொடர்பான சிந்தனைகளையும், ஆக்கபூர்வமான விழுமியங்களையும் ஏற்படுத்தும் என்பதால் இதை விரிவாக செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நல்வாழ்த்துக்கள் உடன் தங்கள் உண்மையுள்ள இறையன்பு என்று கடிதத்தில் கூறியுள்ளார்.
ஆனால் இதை கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடைமுறைப்படுத்துவார்களா? என்பது தான் தற்போதைய கேள்வி சமூகத்தின் நலனுக்காகவும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இது போன்ற ஒரு உத்தரவை ஏற்படுத்திச் சென்றிருக்கிற இறையன்பு அவர்களுக்கு மாணவர்களின் சார்பாகவும், நமது இணையதளத்தின் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.