chennireporters.com

சீமான் தான் சாத்தான், சாத்தான் பிள்ளை, சாத்தான் சகோதரன் சாத்தான் சகலை. இணையத்தை கலக்கும் கவிதை.

சாத்தான் பிள்ளை என்ற பெயரில் விக்டர் தாஸ் என்பவர் சீமான் பேசியது குறித்து ஒரு கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  எல்லா அரசியல் வாதிகளைப்போல என்ன தான் காரி துப்பினாலும் துடைத்து கொண்டு போகிறவராக இருந்தால் நாம் அதைப்பற்றி கவலைப்படவேண்டியதில்லை. இல்லை தலைவர் தனிமனித ஒழுக்கத்திலும் தன் உடம்பில் நல்ல ரத்தம் தான் ஒடுகிறது அது மட்டுமல்ல சாப்பாட்டில் உப்பை உரைக்கும் அளவிற்கு தான் அண்ணன்  போட்டு சாப்பிடுகிறார் என்றால் இந்த கவிதையை பார்த்து சீமான்  பொங்கி விடுவார் என்றே நமக்கு தோன்றுகிறது.

சாத்தான் வேதம் ஓதுவது இதுதானா? மஞ்சள் காமாலை
எல்லாவற்றையும் மஞ்சளாகவே தான் காட்டும்.

திருடனுக்கு யாரைப் பார்த்தாலும் திருடனாகவேதான் தோன்றும் சாத்தான் பிள்ளைக்கு எல்லோரையும் அப்படித் தானே தெரியும். சொன்னவன்
சாத்தான், சாத்தான் பிள்ளை, சாத்தான் சகோதரன் சாத்தான் சகலை சான்று தருகிறேன். சாத்தான் குணமென்ன? மாற்றிப் மாற்றிப் பேசுவது
மருள் விளைவிப்பது குழப்பம் கொணர்வது கலவரம் தருவது.

சரி சொன்னவன் இந்தச் சூத்திரத்துள் வருவானா? வருவானே! முதலில் பெரியாரே என் பெருமான் பிறகு எத்தனை அசிங்கம்
இழுத்துவர ஏலுமோ அத்தனையும் செய்வது.

முதலில் பார்வதி கணபதி முருகன் பரமசிவன் பாலகிருஷ்ணன் பற்றி  பால்பீச்சும் காமப் பேச்சு. பிறகு பாட்டன் முப்பாட்டன் பரம்பரை என்றெல்லாம்
பாத பூஜை செய்வது.

முதலில் “தமிழே சொல்லி விட்டது” என
கோபாலபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடத்துவது பிறகு
“பேனா உடைப்பேன்” என பேநாயாய்க் குரைப்பது. முதலில்
போயஸ் கார்டனைத் திட்டுவது பிறகு “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என
“தூக்கில் போடு” என்றவருக்கு துதி பாடுவது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த பின்பும் “போக்சோ” வுக்குப் பயந்து
“சித்தப்பா ஆட்சி சிறப்பு” என சிறுநீர் வாயொழுக ஊளையிடுவது.

மக்கள் பணந்திருடி சிறைத்தண்டனை ஏகியவர் கால் விழுந்து
“சேர்த்து வைக்கவா” “சேலையில வீடு கட்டவா” என
எளிய பிள்ளையாய் இருமுவுவது.

முதலில் மதமே இல்லை என்பது பிறகு
“தாய்மதம் திரும்பு” என்பது எது தாய்மதம்? கௌமாரம் ஆசீவகம் தானே
தமிழன் தாய் மதம். சைவம் மாலியம் தாய்மதம் என
எந்தத் தறுதலை சொன்னது?

பல்லவ ஆட்சி பின் தானே இவை வந்தன. அதன்முன்
அன்னைத் தமிழ் மண்ணில் வைணவம் பௌத்தம்
வாழ்ந்தகதை தெரியுமா? தெரியாதா?

சைவச் சம்பந்தன் தானே சமணர் எண்ணாயிரம் பேரை
ஈவு இரக்கமின்றி கழுவேற்றியக் கயவன். அது உன் தாய்மதமா? முதலில் சாதி இல்லை என்பது பிறகு சங்ககாலக் குடிச் சமூகத்தை சாதியச் சமூகமாக்கி
தமிழக மக்களிடை தகராறு விதைத்து ஒவ்வொருவன் வேட்டி தூக்கி
சாதிச் சான்றிதழ் தருவது.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” “சாதி இரண்டொழிய”
“ஒன்றே குலம்” “யாதும் ஊரே” கேட்டதுண்டா?

உலகப் போராட்டக் களத்தில் ஒழுக்கம் பேணிய
கட்டுப்பாடு பூணிய தன் உயிர் ஈந்த ஒரு மாவீரனை
புரோட்டா மாஸ்டராக தின்னுருட்டியாக
தீனிப் பண்டாரமாக கேண்டீன் ஓனராக
நீ நிறம் மாற்றியதை மானமுள்ள எந்தத் தமிழனாவது ஒப்புவானா? இல்லை உன்மேல் துப்புவானா?

நீ ஈழ வரலாறு அழிக்க வந்த நாக்பூர் கோடரிக் கம்பு என்பதை
நானிலம் அறியாதா என்ன? ஐநாவில் ஈழ விடுதலை இயக்கம் மீது
அவதூறு பரப்பிய அநியாயக்காரன் தானே நீ.

இதுவரை எத்தனை ஈழத் தமிழர் வீட்டில் விளக்கேற்றி இருக்கிறாய் நீ? கானியில் போகக் கூட காசிலாது கிடந்த நீ கோடிகளின் காரில் வீட்டில் கோமகன் ஆனது எப்படி?சொல்!
ஊழல் ஒழிக்க வந்த உத்தமனே சொல்! ஏழுபேர் விடுதலை சாத்தியம் செய்த திருவாரூரார் ஈழ எதிரி.

துரும்பும் கிள்ளிப் போடாத சித்தப்பா காவிரித்தாய்
தூயவர் இல்லையா? குஜராத் முதல்வர்
அசகாயச் சூரன் என்றவன் தானே நீ. மும்பைவரை போய் காவி மேடையில்
கால்சட்டை அவிழ கைதட்டியவன் தானே நீ.

பிராமணியம் எதிர்க்க பிடறி இலாது
நைந்த அருந்ததியர் மீது நச்சூற்றிய நரிதானே நீ. மணிப்பூர் பேசச் சொன்னால் சிறுபான்மையினர் மீது சிறுநீர்ச் செருப்பு சிதற விட்டவனல்லவா நீ.

அங்கே அவர்கள் அம்மணப்பட்டு நிற்பதை அல்லலுற்றுக் கதறுவதை பேச இயலாமல் பேய் அரசை பிய்த்து வீச முயலாமல் அடித்தாய் பார் ஒரு பல்டி.அது சொல்கிறது
நீ நாக்பூர் அடிமை என்று. உன் வாதமே வருவோம்

பதினெட்டு விழுக்காடு பட்டாபிஷேகம் நடத்தியது என்கிறாய். அவ்வாறு நடத்துமே ஆயின் அடுத்த எண்பத்து இரண்டு விழுக்காடும் திராவிடப் பெட்டி விழாமல்
திருவிழா கண்டிருக்குமா அறிவாலயம்?

பதினெட்டு விழுக்காடு சாத்தான் பிள்ளையெனில்
எண்பத்து இரண்டு விழுக்காட்டுக்கு என்னப்பா பேரு?அதிகம் ஆண்டது
கோபாலபுரம் அல்ல ராமாபுரம் தெரியுமா உனக்கு? இஸ்லாமியர்
அதிக காலமாய் சிறை உள்ளே. அதனால்தான் சொன்னேன் என்கிறாய்

சரி உன் சித்தப்பன் கட்சி தானே கொலு மண்டபத்தில் இருந்தது ஏன் ஒருநாள் கூட நீ கோரிக்கை வைத்ததில்லை? ஏன் அவர் விடுதலை செய்யவில்லை? வடுகரை விரட்டு என்கிறாய் நல்லது எப்போது உன் உள்வீட்டில்
உளி எறியப் போகிறாய்?

மேதகுவை கொண்டுவர வேண்டும் கொன்றுவிட வேண்டும் எனும் தீர்மானம்
அவையேற சபைத்தலைவராய் இருந்தது உன் மாமனார் தானே.

அவரை தோண்டி வந்து தூக்கில் போடலாமா? எழுதி வைத்துக்கொள் நீ அழியும் நாள்
வெகு தொலைவில் இல்லை.

-விக்டர்தாஸ்

இதையும் படிங்க.!