chennireporters.com

பெண் போலீஸ் அதிகாரி பற்றி லஞ்ச புகார் கூறிய எஸ்பிக்கு டி.ஜி.பி கண்டனம்.

சேலம் மாவட்டத்தில் பணியாற்றும் எஸ்பி சிவகுமாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் கண்டனம் தெரிவித்து மெமோ அனுப்பியுள்ளார். இந்த செய்தி தற்போது போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

சேலம் மாநகர காவல் துணையானயாராக லாவண்யா என்பவர் பணியாற்றி வருகிறார்.  அவர் சேலம் மாவட்டத்தில் பதவியைப் பிடிக்க வசூல் வேட்டை நடத்தியுள்ளார் என்ற தலைப்பில் சிவக்குமார் தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்தார். அந்த செய்தி சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் வைரலானது.

அதில் சேலம் மாநகர காவல் துணைய ஆணையர் லாவண்யா சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி பெற வேண்டும் என்று கடந்த 10 மாதங்களாகவே முயற்சி செய்து வருகிறார். ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவிடம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியைப் பெற முயற்சி செய்தார் என அதிர்ச்சி தகவல்களுடன் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த ஸ்டேட்டஸ் வைக்கப்பட்ட மூன்று நிமிடங்களிலேயே எஸ்பி சிவகுமார் நீக்கியுள்ளார். இருப்பினும் சேலம் எஸ் பி தனது whatsappபில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி குறித்து தகவல்களை ஸ்டேட்டஸ் ஆக வைத்தது காவல்துறையில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

 

இது பொதுமக்கள் மத்தியில் போலீசுக்கு பெரும் அவப்பெயர் ஏற்படுத்தி உள்ளது.  இந்த நிலையில் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவகுமாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் மெமோ அனுப்பியுள்ளார்.  அது தவிர கண்டனமும் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகர துணை ஆணையர் லாவண்யாவுக்கு எதிராக தனது செல்போனில் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தது குறித்து தனக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் டிஜிபி உத்தரவு உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

 

முன்னாள் டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு பெண்கள் விஷயத்தில் கரிசனமாக நடந்து கொள்வார் என்கிற குற்றச்சாட்டை பல ஆண்டுகளாக காவல்துறையில் அவரது எதிரணியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க.!