chennireporters.com

ஆணவ திமிர் பிடித்த கலெக்டர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தனது ஷூவை அலுவலக ஊழியரை எடுத்து சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 18-ஆம் தேதி சாகைவார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

18 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொள்வார்கள்.

இந்த திருவிழாவையொட்டி முன்னேற்பாடு பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆகியோர் ஆய்வு செய் வதற்காக நேற்று கோவிலுக்கு சென்றனர்.

 

அப்பொழுது கோவில் வாசலில் கலெக்டர் ஷ்ரவன்குமார்,  தனது ஷூவை கழற்றினார். பின்னர் அதனை எடுத்துச்சென்று காரில் வைக்குமாறு தபேதாரிடம் கூறினர். உடனே அவரும்  கலெக்டரின் ஷூவை கையில் எடுத்துச்சென்று காரில் வைத்தார்.

பின்னர் கோவிலில் ஆய்வு செய்து விட்டு வெளியே வந்ததும், தபேதார் ஓடிச்சென்று காரில் இருந்த ஷூவை எடுத்து வந்து கலெக்டரின் கால் அருகில் வைத்தார்.

உடனே கலெக்டர், அதனை காலில் போட்டுக்கொண்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இதையும் படிங்க.!