chennireporters.com

போலீசார் பதிவேடுகளை பராமரிக்க தெரியாமல் இருப்பது வேதனைக்குரியது டிஐஜி ஆதங்கம்

வேலை தெரியாமல் கல்லா கட்டுவதிலேயே குறியாக இருப்பதால் காவல் நிலையங்களில் பதிவேடுகள் சரிவர பராமரிக்கபடுவதில்லை அதனால் அலுவலக வேலைகள் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் அது பெரும்  மன வேதனையை தருகிறது என்று வேலூர் டி.ஐ.ஜி பேசியிருப்பது போலீசாருக்கு பெரும் தலை குனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

 

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சப்இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்நிலைய எழுத்தர்களுக்கு பதிவேடுகள் பராமரிப்பு குறித்த பயிற்சி வேலூர் சரக டி.ஐ.ஜி எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்  கார்த்திகேயன்,  மணிவண்ணன், கிரன் ஸ்ருதி, ஆல்பர்ட் ஜான் ஆகியோரும், 250 காவல் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, நிலைய பதிவேடுகள் பராமரிப்பு குறித்த பயிற்சியை முருகானந்தம் அவர்கள் அளித்தார். இந்த பயிற்சியின் மூலம் காவல்துறையில் பதிவேடுகள் முழுமையாக பராமரித்தல், குற்றபதிவேடுகள் சரியாக பராமரித்தால், குற்றவாளிகள் தப்பித்துவிடாமல் இதன் மூலம் கண்டறியலாம், நிலைய எழுத்தர்களுக்கு பணிசுமை குறையும் மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையிலான இந்த பயிற்சி நடத்தப்பட்டது.

இந்த பயிற்சி கூட்டத்தில் பயிற்சியை துவங்கி வைத்து வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, இ.கா.ப. அவர்கள் பேசும்போது காவல்நிலையங்களில் பதிவேடுகள் சரிவர பராமரிக்கபடுவதில்லை ஒரு குற்றம் நடக்காததை குற்றம் நடந்ததாக பதிவு செய்வதும் தவறு, குற்றத்தை மறைத்து பதிவு செய்யாததும் தவறு தான். ஒரு காவல்நிலையத்தில் நான் ஆய்வு செய்தேன் அங்கு எட்டு தகவலை ஒரே பதிவேட்டில் ஒருவர் பதிவேற்றம் செய்துள்ளது அதிர்ச்சியளித்தது அந்த பதிவேடு தொலைந்தால் மீண்டும் எட்டு தகவல்களும் கிடைக்காது. காவல்நிலையங்களில் சரிவர பதிவேடுகள் பராமரிக்கப்படாதது மன வேதனையும் வலியை தருகிறது என்று பேசினார்.

பின்னர் வேலூர் சரக கவால்துறை துணை தலைவர் முத்துசாமி கூறுகையில், முக்கியமான பயிற்சி கோப்புகள் பதிவேடுகள் எப்படி பராமரிப்பது என காவல்துறைக்கு பயிற்சி அளிக்கபடுகிறது. 30 வருடங்களுக்கு பின்னர் கூட குற்றவாளிகள் பற்றி தவல் தெரியும் எழுத்தர்களின் சுமையும் குறையும். எந்த முறையை கையாண்டால் கோப்புகளை எளிதில் பராமரிப்பது என தெரியும் இதன் மூலம் வேலூர்,.ராணிப்பேட்டை,திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களின் காவல்நிலையம் மேம்பாடு அடையும் என பேசினார்.

வேலூர் டிஐஜி சரகத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர் மீது போலியாக வழக்கு போட்டு கல்லா கட்டி வருவதும் அது தவிர ராணிப்பேட்டை திருவண்ணாமலை திருப்பத்தூர் வேலூர் ஆகிய பகுதிகளில் அங்கீகாரம் இல்லாத டாஸ்மாக்மார்களில் போலீசார் லஞ்சம் வாங்கி தனியாக கல்லா கட்டி வருகின்றனர்.

அது தவிர அந்தப் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் எல்லா வேலைகளும் நடைபெறுவதாக உளவுத்துறை ஐஜிக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. மதுவிலக்கு காவல்துறையினர் பண மழையில் நனைவதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. அது தவிர தனக்கு வேண்டப்பட்டவர்களை நான் பாதுகாப்பேன் எனக்கு வேண்டப்படாதவர்களை தூக்கி அடிப்பேன் என்று டிஐஜி முத்துசாமி ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.

சட்டம் ஒழுங்கு வேலை தெரியாத தனது உறவினரான ராணிப்பேட்டை எஸ்.பி. கிரன் சுருதியை அவர் எதுவும் கேட்காமல் தட்டிக் கொடுத்து வருகிறார். உயரதிகாரிகள் கூட்டத்தில் சீருடை இல்லாமல் கலந்து கொள்கிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரும்பாலான நேரங்களில் அலுவலகத்தில் இல்லாமல் முக்கிய புகார் மனுக்களை விசாரிக்காமல் அடிக்கடி சென்னை சென்று விடுகிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏற்கனவே தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சசிகுமார் தற்போது மதுவிலக்கு துறையில் இன்ஸ்பெக்டர் ஆகவும் அவர் வாங்கும் லஞ்சப் பணத்தை தவறாமல் உயர் அதிகாரிகளுக்கு தருவதாகவும் உளவுத்துறை அதிகாரிக்கு அனுப்பி உள்ள புகாரில் கூறப்பட்டுள்ளது. இவர்தான் டிஐஜிக்கு ஆல்இன்ஆலாக இருக்கிறாராம். இந்த புகார் தொடர்பாக விரைவில் விசாரணை தொடங்கும் என்கிறார்கள் உளவுத்துறை அதிகாரிகள் ஏற்கனவே முத்துசாமி அண்ணா நகரில் இருந்தபோது செல்வ செழிப்புடன் இருந்து வேலூர் சரகத்திற்கு சென்றாராம்.

இதையும் படிங்க.!