கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில், 5 பிரிவுகளின் கீழ் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்களுடன் நிர்மலா தேவி.
மேலும் பலரின்மீது சந்தேகங்கள், விசாரணைகள் நடத்தப்பட்ட போதும் இறுதியாக பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மட்டுமே குற்றவாளிகள் என இறுதி செய்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் 1360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
2018-ல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணைகளும் வாதங்களும் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பினை கடந்த 26-ம் தேதி வழங்குவதாக கூறியிருந்தார். 26-ம் தேதி தீர்ப்பிற்காக நிர்மலா தேவி வழக்கு எடுத்துக்கொண்ட போது பேராசிரியர் நிர்மலா தேவி நேரில் ஆஜராகாததால், தீர்ப்பினை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார்.
அதன்படி, பிற்பகல் 1 மணிக்கு நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரின் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை அரசு தரப்பில் ஆவணங்களோடு நிரூபிக்க தவறியதால், அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் 5 பிரிவுகளின் கீழ் நிர்மலா தேவிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
இந்திய தண்டனைச்சட்டம் 370-1பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும்,
370-3பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்,
5(i)a பிரிவின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும்,
67 ITP பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும்,
9 ITP பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், விதித்து தீர்ப்பளித்தார். மேலும்