chennireporters.com

#The growing cannabis trade; பெருகிவரும் கஞ்சா வியாபாரம். தொடரும் தொழில் போட்டி கொலைகள். கல்லா கட்டும் காக்கி சட்டைகள்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி செங்குன்றம் அடுத்த விளாங்காடு பக்கம் அருகில் உள்ள பெருங்காவூர் கிராமத்தில் மூன்று கொலைகள் நடந்துள்ளன. இதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் இளைஞர் ஒருவரின் தலை மற்றும் உடலை துண்டு துண்டாக வெட்டி இறந்த தனது நண்பரின் சமாதியில் வைத்த சம்பவம் தமிழ் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Will meet people every Wednesday: Avadi's new police commissioner | Chennai News - Times of India

ஆவடி போலீஸ் கமிஷனர் கே சங்கர்

அதாவது கார்த்திக் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தமிழ் என்பவருக்கும் கஞ்சா வியாபாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. அது தவிர யார் பெரிய ஆள் என்கிற பிரச்சனையும் இருந்தது இந்த நிலையில் கார்த்தியின்  ஆதரவாளர்கள் மூன்று பேர் ஒரே நாளில் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

கார்த்தி, கருப்பு அஜித் என்ற இருவர் மூலம் மேற்படி மூன்று  கொலைகள் நடந்தது தெரியவந்தது. இந்த நிலையில் கருப்பு அஜித் தற்போது சிறையில் இருக்கிறார். அவருக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அஸ்வின் குமார் என்ற இளைஞர்  இன்ஸ்டாகிராமில் ஒரு வாழ்த்து பாடலையும் ஸ்டேட்டஸையும் வைத்துள்ளார். மேலும் தான் எப்படி பட்ட ரௌடி என்பதை ஒரு கானா பாடல் மூலம் பாடி வீடியோவும் வெளியிட்டுள்ளார்.  இதில் கோபமடைந்த கார்த்தி தரப்பினர் அஸ்வின் குமாரை ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வர வைத்து தலை மற்றும் கைகளை தனித்தனியாக துண்டு துண்டாக அவரை வெட்டி கூறு போட்டுள்ளனர் உடலில் இருந்து இரண்டு கைகளை தனியாக வெட்டி எடுத்தும் உடலை தனியாக வெட்டி ஒரு துணியில் போட்டு சுற்றி மீஞ்சூர் பஜாரில் வீசி விட்டனர். அஸ்வின் குமாரின் தலையை மட்டும் வெட்டி எடுத்து வந்து இறந்து போன தனது நண்பர் பெருங்காவூர் அஜித்குமார்  என்பவரின் சமாதியில் வெட்டி எடுத்து வந்த தலையை வைத்தனர். பின்னர் அஜித்குமாரின் சமாதியில் கற்பூரம் ஏற்றி பூஜை போட்டுள்ளனர்.

 

இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. கொலை நகரமான மதுரை, நெல்லை, தூத்துக்குடி போன்ற நகரங்களில் கூட இது போன்ற சம்பவங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்றதில்லை என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். இதுபோன்ற கொலைகள் தொடர்வதற்கு காரணம்  காவல்துறையே காரணம் என்கின்றனர் உளவுத்துறை சேர்ந்த சில மூத்த அதிகாரிகள். உள்ளூரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து விசாரித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை மாறாக கஞ்சா வியாபாரம் செய்பவர்களிடம் லோக்கல் போலீசார் லஞ்சம் வாங்கிக் கொள்வதும் தங்களுக்கு தேவையான சில விஷயங்களை அவர்களிடம் செய்து கொள்வதே இதற்கு காரணம் என்கின்றனர்.

அது தவிர இந்த கஞ்சா வியாபாரிகள் அனைவரும்  16 வயதிலிருந்து 24  வயது உடையவர்களாகவே இருக்கிறார்கள்.  இவர்கள் தங்களிடம் லஞ்சம் வாங்கும் சம்பந்தப்பட்ட காவலர்களை மரியாதையாக கூட நடத்துவதுமில்லை பேசுவதும் இல்லை. மாமா, சித்தப்பா, வா தல இது போன்ற லோக்கல் பாஷைகளில் தான் அவர்களிடம் பேசுகிறார்கள். தங்கள் தொழிலுக்கு  போட்டியாக வேரு யார்  வந்தாலும் எங்கு விற்கிறார்கள் என்கிற தகவலையும் காக்கிகள் எதிராளிகளுக்கு போட்டுக் கொடுக்கிறார்கள். இதனாலேயே இந்த மோதல் ஏற்படுகிறது. இந்த கஞ்சா வியாபாரத்தால் தொழில் போட்டி கொலைகளும் அதிகரித்து வருகிறது என்கின்றனர் மூத்த வழக்கறிஞர்கள்.

குறிப்பாக ஆவடி காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து பெரும் பெரும் தலைகள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். தொடர் கொலைகளும் நடந்து வருகிறது. பிரபல செம்மர வியாபாரி பார்த்திபன் கொலை செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவரை கொலை செய்த முத்து சரவணன் சண்டே சதீஷ் ஆகியவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். அதன் பிறகு விளங்காடு பக்கத்தில் இந்த மூன்று கொலைகள் நடைபெற்றது. அதன் பிறகு தற்போது அஸ்வின் குமார் கொலை நடந்துள்ளது. இந்தத் தொடர் கொலையில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் கண்காணித்து நடவடிக்கை எதுவும் எடுப்பது  இல்லை.  அவர்கள் குற்றப் பின்னணி குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதும் இல்லை. ஏன் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் குற்றவாளிகள் வழக்கமாக கைது செய்யப்படுவார்கள் அந்த வழக்கமான கைது சம்பவம் கூட இந்த ஆண்டு நடைபெறவில்லை.

குற்றப் பின்னணி குறித்து காவல் நிலையத்தில் உளவுத்துறையினரும் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த தொடர் கொலைகள் வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கி அதில் மிகப்பெரிய ரவுடிகள் சிலர் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் சொல்கின்றனர்.  தற்போது போலீசார் போனில் பேசுவதை விசாரித்து விடுகிறார்கள் என்பதால் இந்த ரவுடிகள் வைஃபை மூலமும் whatsapp மூலமும் தாங்கள் செய்ய வேண்டிய கொலைகள் குறித்தும் ரௌடிகளுக்கு ஸ்கெட்ச் போடுவது போன்ற விஷயங்கை விவாதித்து வருவதாக கூறப்படுகிறது.

போலீசார் கஞ்சா வியாபாரத்தை ஊக்குவிக்காமல் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை மறைமுகமாக விசாரித்து நடவடிக்கை எடுத்தால் கஞ்சா வியாபாரமும் குறைந்துவிடும். குற்றவாளிகள் எண்ணிக்கையும் குறையும். ஆனால் மாறாக காவல்துறையினர் யார் கஞ்சா விற்கிறார்களோ அவர்களைப் பற்றி கிராமத்தில் இருந்து அல்லது  செல்போன் மூலமாகவோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ தகவல் தெரிவிக்கும் நபரின் பெயர் விலாசங்களை சம்பந்தப்பட்ட கஞ்சா குற்றவாளிகளுக்கு இவர்கள் சொல்லுவதால் கஞ்சா வியாபாரிகளால் தகவல் தரும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவலர்களை அல்லது காவல் உயர் அதிகாரிகளை அரசு கடுமையாக தண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் கொலை குற்றமும் கஞ்சா வியாபாரமும் எளிதில் தடுக்கப்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பெருங்காவூர், கண்ணம்பாளையம், விச்சூர், விளாங்காடுபாக்கம் ஆகிய பகுதிகளில் கஞ்சா வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் கஞ்சா வியாபாரம் படுஜோராக நடந்து வருகிறது. விலங்காடு பாக்கம் கிராமத்தை  சுற்றி பல தனியார் நிறுவனங்கள் கம்பெனிகள் குடோன்கள் இயங்கி வருகிறது. அந்த இடங்களில் வட இந்திய வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நிறைய பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் கஞ்சாவை விரும்பி புகைக்கிறார்கள் அங்கு கஞ்சா விபரம் சிறப்பாக நடந்து வருகிறது.

காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்திலிருந்து போதை ஊசிகளும் கஞ்சாவும் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சொல்லுகிறார்கள் அந்த பகுதி மக்கள்.  சம்பந்தப்பட்ட கஞ்சா குற்றவாளிகளை போலீசார் தற்போது அடிப்பது கூட இல்லை அவர்களுக்கு பயப்படுகிறார்கள் என்று சொல்லுகிறார்கள் சில வழக்கறிஞர்கள். சின்ன, சின்ன, பசங்க எல்லாம் தற்போது பெரிய ரவுடிகளாக உலா வருகிறார்கள்.

யார் ரவுடி, யார் சாதாரண ஆள் என்பதை கூட தற்போது கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே போலீசாரும் கஞ்சா வியபாரிகளுக்கு பயப்படுகிறார்கள் என்கிற செய்தியை வெளிப்படையாக சொல்லுகிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள் சிலர். எனவே காவல்துறை சிறப்பாக பணியாற்றினால் கஞ்சா வியாபாரம் மட்டுமல்ல சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் எல்லா குற்ற செயல்களும் நிறுத்தப்படும். கொலை கொள்ளை சம்பவங்களும் தடுக்கப்படும்.

 

மஞ்சிவாக்கம் அஸ்வின் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் கீழ் அயனம்பாக்கத்தை சேர்ந்த எல்லப்பன் மகன் ஜெயகுமார், ரெட்டில்ஸ் அடுத்த பெருங்காவூரை சேர்ந்த  கஜேந்திரன் மகன் கார்த்தி  என்கிற ஜெய்பீம் கார்த்தி,  காட்டூர் அடுத்த தத்த மஞ்சி கிராமத்தை சேர்ந்த ஆதி மகன் மனோ என்கிற கருப்பு, அயப்பாக்கத்தை சேர்ந்த ரவியின் மகன் தேவா என்கிற தேவராஜ், மீஞ்சூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த எட்டியப்பன் மகன்  மோகன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க.!