chennireporters.com

நீட் எதிர்ப்பு. மாணவர்கள் கையெழுத்து: பாஜக மாநில செயலாளர் புகார்.

அரசு பள்ளி மாணவர்களை வகுப்பு நேரத்தில் வெளியே அழைத்துச் சென்று நீட் எதிர்ப்புக்காக கையெழுத்து இயக்கம் நடத்திய திமுக குறித்து பாஜகவை சேர்ந்த ஓபிசி பிரிவின் மாநில செயலாளர் கே.ஆர். வெங்கடேசன் என்பவர் திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி அவர்களிடம் புகார் அளித்தார்.

சென்னை செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் திமுக இளைஞரணி சார்பில் நீட்டி ஒழிப்போம் மாணவர்களை காப்போம் என்ற தலைப்பில் நேற்று காலை கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள். மாதவரம் தொகுதி திமுக எம்எல்ஏ சுதர்சனம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது அந்த பகுதி திமுகவினர் பாடியநல்லூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் 150-க்கும் மேற்பட்ட மாணவர்களை மொண்டியம்மன் நகர் மார்க்கெட் பகுதிக்கு அழைத்துச் சென்று நீட் எதிர்ப்புக்கு கையெழுத்து பெற்றனர்

சீருடையில் வந்த மாணவர்கள் எம்எல்ஏ சுதர்சனன் பேசி முடிக்கும் வரை ஒரு மணி நேரம் வெயிலில் காத்திருந்து கையெழுத்திட்டனர். இதை கண்ட சில மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்தனர்

பள்ளி வகுப்பு நடக்கும் நேரத்தில் மாணவ மாணவிகளை கட்டாயமாக அழைத்துச் சென்று சாலையில் காத்திருக்க வைத்து நீட்டி எதிர்ப்பு அரசியல் செய்ய கையெழுத்து பெறுவது என்ன நியாயம் என ஆதங்கப்பட்டனர்.

K.R. வெங்கடேசன். பாஜக ,மாநில செயலாளர் ஓ பி சி பிரிவு .

இது குறித்து பாஜக மாநில ஓபிசி பிரிவு செயலாளர் கே ஆர் வெங்கடேசன் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதியிடம் புகார் அளித்தார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க.!