chennireporters.com

இந்தியாவின் முதல் பெண் IFS அதிகாரியை பாராட்டிய நீதிபதி கிருஷ்ண ஐயர்.

எப்போதும் இணையத்தில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய இளம் தலைமுறை பெண்கள் மற்றும்  மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று பொக்கிஷம்  ”கொனிரா பெல்லியப்பா முத்தம்மா” IFS . யார் இவர்? படியுங்கள் ..!!!இந்தியாவின் முதல் வெளியுறவுத்துறை அதிகாரி முத்தம்மா.

பெண்களுக்கு சிவில் சர்வீஸ் என்பது எட்டாக்கனியாக  இருந்த காலத்தில் அந்த நிலையை மாற்றி வரலாற்றில்  தன்னோட பெயரை அழுத்தமா பதிவு செய்தவர் பல பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும்  ரோல் மாடலாக  இருந்தவங்க தான் சி. பி. முத்தம்மாஐ.எப்.எஸ்.இந்தியாவின் முதல் வெளியுறவுத்துறை அதிகாரி முத்தம்மா.

1924-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் விராஜ்பேட் என்னும் ஊரில் பிறந்தவர் தான் கொனேரி பெல்லியப்பா முத்தம்மா. சிறுவயது முதலே முத்தம்மாவுக்கு படிப்பின் மீதன ஆர்வம் அதிகம். முத்தம்மாவுக்கு 9 வயசு இருக்கும்போதே அவரோட அப்பா இறந்துட்டாரு. கணவரின் மறைவுக்குப் பிறகு முத்தம்மாவோட அம்மா பிள்ளைகளோட படிப்பு தான் குடும்பத்தை உயர்த்தும் என ரொம்ப உறுதியா நம்பினார்.கொனிரா பெல்லியப்பா முத்தம்மா பள்ளிப்படிப்பை முடிச்சு சென்னை கிருத்துவ கல்லூரியில் இளங்களை பட்டமும், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதுகலை பட்டம் படித்தார். கல்லூரியில் மூன்று முறை தங்கப்பதக்கம் பெற்றார். கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு முத்தம்மாவினுடைய கவனம் சிவில் சர்வீஸ் பக்கம் திரும்பியது. 1949ம் ஆண்டு  சிவில் சர்வீஸ் தேர்வில்  முத்தம்மா வெற்றி பெற்றார்.

இந்தியாவின் முதல் வெளியுறவுத்துறை அதிகாரி முத்தம்மா.

அந்த கால கட்டத்தில் வெளியுறவுத்துறையில் பெண்களுக்கு எதிராக பல விதிகள் இருந்தன. பணி முதிர்வு, பதவி உயர்வு போன்றவற்றிலும் உரிமை வேண்டும் என்று எந்தப் பெண்ணும் கோர முடியாது. வெளியுறவுத்துறையில் பணியாற்றும் பெண்கள் திருமணம் செய்ய வேண்டும் என்றால் அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு பணியில் முன்புபோல செயல்பட முடியவில்லை என்றால் ராஜினாமா செய்ய வேண்டும். பெண்களின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் எதிராக இருக்கும் இந்த விதிகளை எதிர்த்து முத்தம்மா வழக்கு தொடுத்தார்.உச்சநீதிமன்றத்தில் இவர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணய்யர் இந்த விதிகள் ஆண்களுக்கு சலுகைகள் வழங்குவது போல் அமைந்திருப்பதை உணர்ந்தார். “தமது குடும்பப் பொறுப்புகள் காரணமாக ஒரு பெண் தனது பணியைச் சரிவரச் செய்ய முடியாவிட்டால் அவரது பணி பறிபோகும் என்றால் அந்த விதி, மணமான ஆணுக்குமல்லவா பொருந்தும்?” என்ற கேள்வியையும் எழுப்பினார். அதற்கு பிறகு பாலியல் பாகுபாடு நிறைந்த விதிகள் உடனே மாற்றி  உத்தரவிட்டார். தனது நியாயத்திற்காக நீதிமன்றம் சென்று தைரியமாக வழக்கு தொடுத்ததற்காக முத்தம்மாவை நீதிபதி  பாராட்டினார்.முத்தம்மாவின் வழக்கும் இவர் பெற்ற வெற்றியும் அரசின் கவனத்தை ஈர்த்தது.  1970-இல் ஹங்கேரிக்கு இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டு இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி என்ற பெருமையை பெற்றார் முத்தம்மா . நெதர்லாந்து, கானா உள்ளிட்ட நாடுகளுக்கும் தூதராக பணியாற்றினார். 32 ஆண்டுகள் சிறப்பாக அரசு பணியில் ஈடுபட்ட முத்தம்மா 1982-இல் ஓய்வு பெற்றார்.நீதிபதி கிருஷ்ண ஐயர்.

கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாத முத்தம்மா ஓய்வுக்கு பிறகு டெல்லியில் இவருக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தை அன்னை தெரசாவின் ஆதரவற்றோர் இல்லம் கட்ட நன்கொடையாக வழங்கினார். இந்தியாவின் முதல் வெளியுறவுத்துறை அதிகாரி முத்தம்மா.

முகம் தெரியாத மனிதர்களுக்கும்  தாயானார் முத்தம்மா. முத்தம்மா தனது 85-வது வயதில் அக்டோபர் 10, 2009-ம் ஆண்டு பெங்களூருவில் காலமானார். நீதிபதி கிருஷ்ண ஐயர்.

அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று இருந்த காலத்தில் முத்தம்மா இந்திய சிவில் சர்விஸ் தேர்வு எழுதி இந்தியாவின் முதல் வெளியுறவுத்துறை அதிகாரியாக பணியாற்றியவர். கடுமையாக உழைத்தால் வெற்றியும் பதவியும் எளிதாக அடைந்து விடலாம் என்பதை பெண்கள் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவர். இந்தியாவின் முதல் வெளியுறவுத்துறை அதிகாரி முத்தம்மா.

இவரை போன்றவர்கள் இந்த தேசத்தில் வாழ்ந்தார்கள் என்பதை இன்றைய இளம் தலைமுறை பெண்களுக்கு கற்றுக் கொடுப்பது நமக்கு அவசியம்.  முத்தம்மாவின் படிப்பு வாழ்க்கை, கல்வி முறை பொது வாழ்க்கை குறித்து இன்றைய தலைமுறையினர் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். இது காலத்தின் கட்டாயம் . வாசியுங்கள் முத்தம்மாவின் வாழ்க்கை வரலாற்றை. வாழ்க்கையின் தரம் உயரும்.

இதையும் படிங்க.!