விளாப்பழத்தின் மகத்துவம். மனிதர்களின் அருமருந்து.

October 19, 2023

By இரா. தேவேந்திரன்.

விளாம்பழம் பலராலும் விரும்பப்படும் பழங்களில் ஒன்று. இதில் பல மருத்துவக் குணங்கள் உள்ளன.

விளாம்பழத்துடன் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்துவர நினைவாற்றல் அதிகரிக்கும்.

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ சத்தும் நிறைந்துள்ளது. இப்பழத்தை தினசரி ஒரு பழம் வீதம், வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டுவந்தால் பித்தம் சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் குணமாகும்.

 பித்தத்தால் தலைவலி, கண்பார்வை மங்குதல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்தக் கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம்பழம் குணப்படுத்தும்.

விளாம்பழத்தில் வைட்டமின் ஏ, சுண்ணாம்பு சத்து (கால்சியம்) அதிகமாக இருப்பதால் பல், எலும்புகள் வலுவாகும்.  தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சியை அளித்து, ரத்தத்தை சுத்திகரித்து விருத்தி செய்கிறது.

விளாமரத்தின் பிசினை சாப்பிட்டுவர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் குணமாகும்.

விளாம்பழம், நரம்புத் தளர்ச்சியைக் குணமாக்கும்.

வாய்ப்புண், அல்சர் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணத்தைத் தரும்.

விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தத்தால் ஏற்படும் வாந்தி, தலைச்சுற்றல் நிற்கும். விளாமர இலையைத் தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க வாயுத்தொல்லை நீங்கும்.

விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க, நாள்பட்ட பேதி சரியாகும்.

பித்த வெடிப்பு, தோல் வறட்சி குணமாக விளாம்பழ இலைச்சாற்றை தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

விளாம்பழ மரத்தின் இலையை அரைத்து சாறு எடுத்து வியர்க்குருவில் தடவி வர, வியர்க்குரு மறையும்.

விக்கல், அஜீரணம், வயிற்றுப்போக்கு இவற்றுக்கு விளாம்பழ இலைச்சாறை பாலில் கலந்து குடிக்க குணம் தரும்.

விளாமர பிசினை உலர்த்திப் பொடி செய்து தினமும் தேனில் கலந்து சாப்பிட, வறட்டு இருமல், கபம், பித்தசுரம், நெஞ் செரிச்சல் குணமாகும்.

பெண்களுக்கு மார்பக, கருப்பை புற்று நோய் வராமல் தடுக்கும். நல்ல வலி நிவாரணியாகவும் விளாம்பழம் செயல்படுகிறது.

Share:

இரா. தேவேந்திரன்.

October 29, 2023

Leave a Comment