போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தீவிரமாகத் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக்கை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்.சி.பி). விசாரணையின் தொடக்கத்திலேயே, ‘போதைப்பொருள் மூலமாகக் கிடைத்த வருமானத்தை, ரியல் எஸ்டேட் தொடங்கி சினிமா வரையில் பல துறைகளிலும் முதலீடு செய்திருப்பதாக’ வாக்குமூலம் அளித்திருக்கிறார் சாதிக்.
மலேசியா, துபாய், நியூசிலாந்து நாடுகளில் தனக்கிருக்கும் தொடர்புகள் குறித்தும் பேசியிருக்கிறார். விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கும் என்.சி.பி., சாதிக்கோடு தொடர்புடைய 23 வி.ஐ.பி-க்களுக்கு நோட்டீஸ் வழங்கவும் ஆயத்தமாகிறது. சாதிக் வழக்கில் அவர் சிக்கியதன் பின்னணி என்ன?
சென்னை டு ஜெய்ப்பூர்; காட்டிக்கொடுத்த இ-மெயில்… ‘பகீர்’ சாதிக்!
ஜாபர் சாதிக்கும் சதானந்தமும்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில், டெல்லியில் தன் கூட்டாளிகள் மூன்று பேர் கைதானதாக என்.சி.பி அறிவித்தவுடனேயே ஜாபர் சாதிக் தலைமறைவாகிவிட்டார். பத்து நாள்களாகத் தலைமறைவாக இருந்தவரை, தீவிர தேடலுக்குப் பிறகுதான் தட்டித் தூக்கியிருக்கிறது என்.சி.பி-யின் டெல்லி ஸ்பெஷல் யூனிட். காவல் எல்லைப் பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காக, அவரை டெல்லியில் கைதுசெய்ததாக என்.சி.பி கூறினாலும், ராஜஸ்தான் மாநிலம், ஜெயப்பூரில் வைத்துத்தான் அவரைக் கைது செய்திருக்கிறார்கள்.
ஜாபர் சாதிக் கூட்டாளி சதா
ஜாபர் சாதிக் கூட்டாளி சதா என்பவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
டெல்லியில் ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சதா கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உட்பட இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னையில் பதுங்கியிருந்த சதா என்கிற சதானந்தத்தை கைது செய்தனர். பின்னர் அவரை அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில் 2018ம் ஆண்டு ரூபாய் 25 கோடி மதிப்பிலான போதைப் பொருளை ஜாஃபர் சாதி கடத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மேலும் 2013 ம் ஆண்டு சதானந்தம் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரூபாய் 25 கோடி மதிப்பிலான சூடோ பெட்ரைன் போதைப்பொருள் 2018 ல் மலேசியாவிற்கு கடத்தப்பட்டது குறித்து சதானந்தத்திடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 2019 ம் ஆண்டு ரூபாய் ஒரு கோடியே 3 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.