chennireporters.com

சாட்டை சுழற்றிய டி.ஐ.ஜி. கட்டிங் வாங்கிய மூன்று பெண் இன்ஸ்பெக்டர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

செட்டிங் போட்டு கட்டிங் வாங்கிய மூன்று பெண் இன்ஸ்பெக்டர்களை வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி  கடந்த மூன்று நாட்களில் மூன்று பெண் இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் இதில் பெண் காக்கிள் தரப்பு அதிர்ந்து போயுள்ளதாம்.

வாணியஇன்ஸ்பெக்டர் சாந்தி.

வாணியம்பாடி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட  வழக்கில்  குற்றவாளிகளை காப்பாற்ற கட்டிங் வாங்க ரேட் பேசியுள்ளார் இன்ஸ்பெக்டர் சாந்தி.  கட்டிங் முதல் தவனை மட்டும் இன்ஸ்பெக்டர் சாந்தி கைக்கு வந்துள்ளது. மீதி பாக்கி பணம் கைக்கு வருவதற்கு முன்பே  ஆகவே அவர் பணியாற்றிக் கொண்டிருந்த வாணியம்பாடி மகளிர் காவல் நிலையத்தில் இருந்து மாற்றப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்ஸ்பெக்டர் யுவராணி.

வாணியம்பாடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மலர் இவர் தனது ஆண் நண்பர் சொல்கிற படி காவல் நிலையத்தை வழி நடத்தி வந்ததாகவும், பதிக்கப்பட்ட ஒரு பெண் அவர் மீது அளித்த புகாரின் அடிப்படையிலும் இவரையும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள உமராபாத் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் யுவராணிம்  காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து வேலூர் சரக டிஐஜி முத்துசாமி,  உத்தரவிட்டுள்ளார்.இவர் மீது சட்டவிரோதமாக செயல்படும் சம்பவங்களை தடுக்க தவறியதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பாக  பெண் காவல் ஆய்வாளர் யுவராணி  மணல் கொள்ளை,  கள்ள சாராயம் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களை  செய்யும் சமூக விரோதிகளிடமிருந்து மாதா, மாதம் கட்டிங் வாங்கியதாக குற்றசாட்டு எழுந்தது. மேலும் அந்த சட்ட விரோத செயல்களை தடுக்க தவறியதாக வேலூர் சரக டிஐஜி முத்துசாமிக்கு பல புகார்கள் அனுப்பபட்டது. அதன் அடிப்படையில்  இன்ஸ்பெடர் யுவராணி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.தமிழகம் முழுவதும் காவல்துறையில் உள்ள பெண் இன்ஸ்பெக்டர்கள் சமீப காலங்களில் லஞ்சம் வாங்குவதில் ஆண் அதிகாரிகளை விட வேகமாக வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக தாம்பரம் மாநகர காவல் ஆணையத்திற்கு உட்பட்ட பகுதியில் 4 பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் காவலர்களை சஸ்பெண்ட் செய்து இருக்கிறார் கமிஷனர் அமல்ராஜ்.

இன்ஸ்பெக்டர் மலர்.
மேலும் திருச்சி, மதுரை போன்ற பகுதிகளிலும் பெண் காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தங்களை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது என்கிற நிலையில் லஞ்சம் வாங்குவதில் கொஞ்சம் கூட தயக்கம் இன்றி கல்லா கட்டி வருகின்றனர் பெண் அதிகாரிகள்.

இந்த நிலையில் வேலூர் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் 3 பெண் இன்ஸ்பெக்டர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  அது தவிர பல காவல் நிலையங்களில் நீண்ட வருடங்களாக பெண் காவலர்கள் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஒரே இடத்தில் பணியாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதையும் வேலூர் சரக டிஐஜி  முத்துசாமி கவனத்தில் கொண்டு அதிகாரிகளுக்கு ஜால்ரா அடிக்கும் பெண் அதிகாரிகளை களையெடுக்க வேண்டும் என்கின்றனர் சில பெண் காவல் அதிகாரிகள். 

இதையும் படிங்க.!