திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் சின்னமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் அவரது மகன் தினேஷ் குமார் வேன் டிரைவர்14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் இருவரும் கோவை பீளமேடு பகுதியில் வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்திய தாக தெரிகிறது அப்போது பலமுறை சிறுமியிடம் பலவந்தமாக பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக தெரிகிறது.
சிறுமி மாயமானது தொடர்பாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர் இதை அறிந்த தினேஷ்குமார் சிறுமி அவரது ஊரில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
இதையடுத்து காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்புகாரின் பேரில் போலீசார் தினேஷ்குமாரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.