அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தற்கு ரூபாய் 5,000ம் லஞ்சம் கேட்டு தர மறுத்த குழந்தையின் பெற்றோரை அடித்த அரசு மருத்துவமனையின் நர்ஸ் அமுதா மீது இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது தவிர “ நர்ஸ் அமுதாவை ” அந்த மருத்துவமனையின் வளாகத்தில் நிற்க வைத்து பொதுமக்கள் அமுதா முகத்தில் காரி உமிழ்ந்து செருப்பால் அடிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் நடந்த பிரசவத்துக்கு நர்ஸ் அமுதா ரூபாய் 5,000 லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் கு 3,000 ரூபாய் மட்டுமே உள்ளதாக பெண்ணின் கணவர் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் அவதூறாக பேசி நர்ஸ் அமுதா அடித்து வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.அந்த வீடியோவில் கர்ப்பிணி பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் உள்ளனர். அதேபோல் ஆவேசத்துடன் நர்சும் அவர்களிடம் ஆபாசமாக பேசுகிறார்.. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்து நர்ஸ் அமுதா மருத்துவமனையின் கேட்டுக்கே சென்று குழந்தையின் அக்காவை சட்டையை பிடித்து அடிக்கிறார்.
அமுதா நர்ஸ்.
இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நர்ஸ் அமுதாவை கண்டித்து பேசி வருகிறார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதுபோன்ற நர்சுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இதனிடையே எல்லா மருத்துவமனையிலும் அரசு உள்ளே சென்று கவனிக்க முடியாது என்பது உண்மை. ஆனால் இதுபோல வரும் புகார்களுக்காவது உரிய நடவடிக்கை எடுத்தால் இது போல் செய்ய நினைக்கும் மற்றவருக்கு பயம் வரும் என்று நெட்டிசன் ஒருவர் கூறின
மணிகண்டன் என்பவர் வெளியிட்ட ட்விட் பதிவில், எங்கள் ஊராட்சியில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றதே இல்லை. லஞ்சத்தில் தன் குழந்தையின் பிரசவம்.அந்த தாயின் பிரசவத்தின் வலியை விட லஞ்சத்தின் வலி மிகவும் கொடுமையானது.என்று கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், லஞ்சம் வாங்காத அரசு அலுவலகம் அப்படின்னு எதுவுமே இல்ல போல இருக்கு.இரண்டு நாளைக்கு முன்னாடி குன்றத்தூர் சார் பதிவாளர் அலுவலகம் சென்றிருந்த்தேன் அங்கு லஞ்சம் இல்லாமல் அணுவும் அசைய வில்லை. எல்லா அதிகாரிகளுக்கும் அங்கு அங்கு பணம் வாங்க ஆட்கள் உள்ளனர் என கூறியுள்ளார். இதேபோல் பலரும் அரசு மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டி வருகிறார்கள். அமுதா போன்ற நர்சுகளை அரசு உடனடியாக டிஸ்மி செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் பணம் தரவில்லை என்ற காரணத்திற்காக குழந்தைகளை கொன்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டது என்று கூட சொல்லும் சூழ்நிலை உருவாகலாம் என்று சமூக வலைதளத்தில் பொதுமக்கள் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர் எனவே அரசு அமுதாவை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கி அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாகும்.