chennireporters.com

ayodhya: 1993-ல் படுகொலை செய்யப்பட்ட ராமர் கோவில் முதல் பூசாரி லால் தாஸ்.

அயோதி இராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. அதனைத்தோடர்ந்து இராமர் பற்றியும் ராமர் கோயில் பற்றியும் பல்வேறு செய்திகள் சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது. அயோத்தி ராமர் கோவிலின் படுகொலை செய்யப்பட்ட முதல் பூசாரி  லால் தாஸ்.பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன் – மசூதியின் மையக் குவிமாடத்தின் கீழ் அமைந்த சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி கோவிலுக்கு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முதல் தலைமை பூசாரிதான் இந்த லால் தாஸ்.

பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்டு நடந்த சம்பவம் அல்ல' - அத்வானி, உமாபாரதி  உள்ளிட்ட அனைவரும் விடுதலை | All accused acquitted in the Babri Masjid  demolition case - Vikatan

ராமர் கோயில் பூசாரியாக இருந்தபோதும் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டுவது என்பது ஹிந்துகளின் ஓட்டுகளைப் பெறுவதற்காக மக்களிடையே மூட்டப்படும் சண்டை என்றார் அவர். அது மத உணர்வுகளைத் தூண்டக்கூடிய அப்பட்டமான அரசியலைத் தவிர வேறில்லை என்று பகிரங்கமாக எதிர்த்தார்பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அப்போது உத்திரப்பிரதேசத்தை ஆட்சி செய்த பிஜேபி அரசாங்கம் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி லால் தாஸை தலைமைப் பூசாரி பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கியது.லால் தாஸ் ஒரு கம்யூனிஸ்டு என்றும், கோயிலுக்குள் பகத்சிங் படத்தை வைத்திருந்தாரென்றும்
அவர் மீதான வதந்திகள் பரப்பப்பட்டன.பணி நீக்கத்தை எதிர்த்து தாஸ் கோர்ட்டுக்குப் போனார். இந்நிலையில் ல் 1993 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி, நள்ளிரவில், அயோத்தியில் இருந்து – 20 கிமீ தொலைவில் ராணிபூர் சத்தர் கிராமத்தில் பிணமாகக் கிடந்தார் லால் தாஸ். அவரை சுட்டுக் கொலை செய்துவிட்டார்கள். கொலைக்குக் காரணம் நிலத்தகராறு என்று வழக்கு முடிக்கப்பட்டது.

 

இதையும் படிங்க.!