chennireporters.com

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விருது பெற்ற இளம் தலித் படைப்பாளி.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முரிச்சம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.

இவரது மகன் மு.வெ.ஆடலரசு இளங்கலை பட்டமும் முதுகலையில் இதழியல் மற்றும் தொடர்பியல் படித்துள்ளார் மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புற வியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் பற்றி படித்து வருகிறார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் இசை மொழியும் ஆதி இனமும் என்ற தலைப்பில் உருவான புத்தகத்தை கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் சிறந்த புத்தகமாக இவர் எழுதிய புத்தகத்தை தேர்வு செய்தனர்.

தமிழகம் முழுவதும் பல கலைஞர்கள் பல படைப்புகளை அனுப்பி இருந்தார்கள் அதில் இவருடைய புத்தகம் சிறந்த புத்தகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2019 மற்றும் 2020ம் ஆண்டிற்கான சிறந்த படைப்பாளிகளுக்கான விருதை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆடலரசுவுக்கு வழங்கினார் அந்த புத்தகத்தை அச்சடித்து பதிப்பு செய்வதற்கான தொகை நாற்பதாயிரம் ரூபாயாகும்.

அதற்கு முன் தொகையாக 20,000 ரூபாய் வந்து முதலமைச்சர் வழங்கினார் இந்த விழா கடந்த 9ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த புத்தகத்தில் கலை பண்பாடு இசைப்பற்றி சிறப்பாக குறிப்பிட பட்டுள்ளது என்பதற்காக தேர்வு செய்ய பட்டுள்ளது குறிப்பிட தக்கது.

இதையும் படிங்க.!