செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அவர்கள் மற்றும்மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் . மா. சுப்பிரமணியன் ஆகியோர் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், நாளை (11.04.2022) திங்கட்கிழமை காலை 09.00 மணியளவில் நடைபெறும்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் சிறப்பு முகாமினை தொடங்கி வைக்கிறார்கள்.
சென்னை, தலைமைச் செயலகம், செய்தி மக்கள் தொடர்புத் துறை, செய்தி வெளியீட்டுப் பிரிவின் மூலம் 2021 / 2022 ஆம் ஆண்டிற்கான அங்கீகார அட்டை – Accreditation Card (வரிசை எண். 301 முதல் 1073 வரை) மற்றும் பத்திரிகையாளர் அட்டை – Press Pass (வரிசை எண். 1 முதல் 585 வரை) வழங்கப்பட்டுள்ளவர்கள் மட்டும் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் (நகல்) நாளை (11.04.2022) திங்கட்கிழமை காலை 07.30 மணியளவில் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆவணங்கள் (நகல்):
(1) அங்கீகார அட்டை – Accreditation Card / பத்திரிகையாளர் அட்டை – Press Pass
(2) Family Card (Smart Card & Old Card)
(3) Aaadhar Card
இச்சிறப்பு முகாம் 11.04.2022 திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தொடர்ந்து இரண்டு வாரங்கள் நடைபெறுகிறது.
– துணை இயக்குநர் (பத்திரிகை தொடர்பு),
செய்தி வெளியீட்டுப் பிரிவு,
தலைமைச் செயலகம்,
சென்னை.