பாஸ்போர்ட் கோரி நளினி தொடர்ந்த வழக்கு;
4 வாரங்களில் முடிவெடுக்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
லண்டனில் உள்ள மகளை காணச் செல்ல ஏதுவாக பாஸ்போர்ட் கோரி ஜூன் மாதம் விண்ணப்பித்தும், தற்போது வரை வழங்கப்படவில்லை.என நளினி மனு காவல்துறை சரிபார்ப்பு பணிகள் முடிந்து, பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டதாக காவல்துறை தரப்பில் பதில் 32 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்த நளினி, தனது மகள் ஆரித்ரா உடன் இருப்பதற்காக லண்டன் செல்ல ஜூன் மாதம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தும் இதுவரை வழங்கப்படவில்லை என வழக்குபோட்டிருந்தார்.அந்த வழக்கு தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் இருந்தது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க, மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் நளினிக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்கின்றனர் நளினி தரப்பு வழக்கறிஞர்கள்.