மூட் அப்செட்டான அண்ணாமலை அமெரிக்க பிறந்த ரகசியம் என்ன என்று பாஜகவின் முக்கிய தலைவர்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.
டெல்லியில் குவியும் ரிப்போர்ட் அண்ணாமலை பதவிக்கு ஆபத்து? தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை மீது அக்கட்சி மூத்தத் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், இது தொடர்பாக, பாஜக மேலிடத்திற்கு பல புகார்கள் அனுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக, கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இவர் மாநிலத் தலைவராக பாெறுப்பேற்றதில் இருந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், திமுக அமைச்சர்களையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை விடாமல் துரத்தி வருகிறார் அண்ணாமலை.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை மீது அக்கட்சி மூத்தத் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர், பாஜக தலைவரானதில் இருந்து மூத்தத் தலைவர்கள் யாரையும் மதிப்பது இல்லை. யாரிடமும் எந்த ஆலோசனையும் நடத்துவது இல்லை. தான் சொல்வது தான் சரி என்று பேசிக் கொண்டிருக்கிறார். மூத்தவர்களை மதிக்காததால் அண்ணாமலைக்கு எதிராக அனைத்து தலைவர்களும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக பாஜக மூத்தத் தலைவர்கள் கூறியதாவது: பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல தனது சொந்த கட்சிக்காரர்களையும் அண்ணாமலை தொடர்ந்து அவமதித்து வருகிறார். கட்சிக்காரர்களை எப்போதும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார். அவரது ஓட்டுனரை கூட சந்தேகப்படுகிறார்.
பாஜவுக்கு வந்தவுடன் மாநில தலைவர் பதவி கொடுத்ததாலும், கட்சியை பற்றி ஒன்றும் தெரியாமல், கட்சியின் முக்கிய தலைவராக உள்ள சந்தோஷை பிடித்து வந்ததாலும், கட்சியினர் வேறு வழியில்லாமல் அண்ணாமலையை அட்ஜஸ்ட் செய்து கொண்டார்கள். சுற்றுப்பயணம், பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது தவிர வேறு எதையும் அண்ணாமலை செய்வதில்லை. கட்சிக்காரர்களை மதிப்பது இல்லை. இதனால் தொண்டர்களும், மூத்த தலைவர்களும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, அண்ணாமலை குறித்து டெல்லி பாஜக மேலிடத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக விரைவில் கட்சி மேலிடம் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி மேலிடத்திற்கு இந்த புகார்கள் போனவுடன் மூடு அப்செட் ஆன அண்ணாமலை திடீரென இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென்று அமெரிக்கா சென்று உள்ளார் என்ன காரணத்திற்காக அமெரிக்க சென்றார் அவர் அங்கு யாரை சந்தித்து பேச போகிறார் என்கிற தகவல் இதுவரை எதுவும் வெளியாகவில்லை.