chennireporters.com

பங்கு பிரிப்பதில் தகராறு அடித்து தூள் கிளப்பிய நியூஸ்7 ரிப்போர்ட்டர் கைகலப்பில் முடிந்த (கவர்) சண்டை.

ரிப்போர்ட்டர் மாறன்

திருவள்ளூர் தாசில்தார் கொடுத்த பணத்தில் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ரிப்போர்ட்டர் ஒருவருக்கு அடி விழுந்தது இந்த சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.

திருவள்ளூர் உங்கள் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் என்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது இந்த விழாவிற்கு திருவள்ளூர் தி.மு.க எம்.எல்.ஏ வி.ஜி. ராஜேந்திரன் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் பத்திரிகையாளர்களுக்கு பாக்கெட் மணியாக ரூபாய் 3500 கொடுத்ததாக கூறப்படுகிறது இதை சக பத்திரிகையாளர்களுக்கு பிரித்து கொடுப்பதற்கு நியூஸ்7 ரிப்போர்ட்டர் தமிழ் என்கிற தமிழன் தலைமையில் ஒரு குழு பங்கு போட்டு கொண்டிருந்தது.

நியூஸ்7 ரிப்போர்ட்டர் தமிழ் என்கிற தமிழன்

அப்போது அம்மா எக்ஸ்பிரஸ் என்கிற பத்திரிகையை சேர்ந்த ரிப்போர்ட்டர் மாறன் என்பவர் அந்த நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்கச் சென்றுள்ளார் அவருடன் நெற்றிக்கண் பத்திரிகையின் செய்தியாளர் அருண் என்பவரும் உடன் சென்றுள்ளார்.

உடனே நியூஸ்7 ரிப்போர்ட்டர் தமிழன் டேய் தம்பி இங்கே வா யார் நீ ? ஏன் அடிக்கடி இங்கே வருகிறாய் நீ என்ன அவ்வளவு பெரிய பத்திரிகை ரிப்போர்ட்டரா?  என்று அவரை ஏளனமாக பேசியது இல்லாமல், அசிங்கமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதற்கு மாறன் நானும் ரிப்போர்ட்டர் தான் நான் வந்தால் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று மாறன் கேட்க உடனே ஆவேசமடைந்த நீயூஸ் 7 ரிப்போர்ட்டர் தமிழன் பளார், பளார் என்று மாறனின் கண்ணத்தில் அடிக்கத்துவங்கினார்.

இதை சற்றும் எதிர்பாராத மாறன் அவர் கையில் வைத்திருந்த செல்போன் கீழே விழுந்து உடைந்தது அதுதவிர ஒருகணம் மெய் மறந்து நின்ற மாறனை பக்கத்தில் இருந்த அருண் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்.

இது குறித்து மாறன் கூறுகையில்.

நான் கடந்த ஒரு வருடமாக செய்தியாளராக பணியாற்றி வருகிறேன் யாருடனும் கூட்டு சேர்ந்தோ எந்த அதிகாரிகளிடம் சென்று உதவியோ பணமோ கேட்டதில்லை.

நான் செய்தி சேகரிக்க சென்ற போதெல்லாம் மேற்படி நபர் நீ எல்லாம் ஒரு ரிப்போர்ட்டரா? என்று ஏளனமாய் பேசி வந்தார்.

அது தவிர பத்திரிகையாளர் என்கிற ஒழுக்கம் இல்லாமல் பலரை ஒருமையிலும் அவ மரியாதையுடனும் பேசி வந்தார்.

இந்த நிலையில் நான் செய்தி சேகரிக்க சென்ற போது என்னை அசிங்கமாக பேசி அடித்துவிட்டார்.

உடனே என்னை தடுத்த தினத்தந்தி ரிப்போர்ட்டர் அசோகன் டேய் தம்பி என்ன நடந்துச்சு ஒரு அடி அடித்து விட்டார்.

அவ்வளவுதான் இது ஒரு பெரிய விஷயமா அமைதியா போயிடு என்று என்னை மிரட்டினார்.

இது தொடர்பாக மாறன் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரிடம் புகார் அளித்தார் பத்திரிகையாளர்கள் சண்டை என்பதால் இன்ஸ்பெக்டர் வழக்கு போடாமல் டி.எஸ்.பி. துரைப்பாண்டியனிடம் தகவலை சொன்னார்.

மாறன் கொடுத்த புகாருக்கு போலீசார் கொடுத்த ரசிது(csr)

அவர் இன்று மதியம் 12 மணிக்கு இரு தரப்பையும் நேரில் அழைத்து சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினார்.நீயூஸ் 7 ரிப்போர்ட்டர் தமிழன் தான் செய்தது தவறு என்றும் உங்கள் காலில் வேண்டு மானாலும் விழுகிறேன்.

என்னை மன்னித்து விடுங்கள் என்று மாறனிடம் மன்னிப்பு கேட்டார் அனைத்து பத்திரிகையாளர்கள் முன்னிலையிலும் மன்னிப்பு கோரியதால் ரிப்போர்ட்டர் மாறன் தான் கொடுத்த புகார் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு

தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார்ஏற்கனவே 2018ம் ஆண்டு ஜூனியர் விகடன் செய்தியாளரை அடித்த வழக்கில் 455/2018 சத்தியம் தொலைக்காட்சி செய்தியாளர் சுதாகர், நியூஸ்7 ரிப்போர்ட்டர் தமிழ் ,ஒரு டுபாக்கூர் பத்திரிகையாளர் இன்பராஜ் போன்ற மூவர் மீதும் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
பத்திரிகையாளர்கள் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறை பார்த்ததும் தாலுகா ஆபீசில் இருந்த பொதுமக்கள் காரி முகத்தில் உமிழாத குறையாக கிண்டலாக சிரித்துக்கொண்டே சென்றனர்.

திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் திருவள்ளூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் உருவாக்கப்பட்டு அரசு விழா, தனியார், பொது நிகழ்ச்சிகள், அரசியல் கட்சிகள் என எந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும்

அங்கு சங்கத்தின் தலைவர் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்துவோரிடம் செய்தி போட வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்கின்றனர்.

அறப்போர் மற்றும் சட்டப் பஞ்சாயத்து ஊழலுக்கு எதிரான அமைப்பு போன்ற இயக்கத்தை சார்ந்தவர்கள்

திருவள்ளூரில் பத்திரிகையாளர்களின் செயல் பாடுகள் மற்றும் வரை முறை அளவுக்கு மீறி செல்கிறது

இதை மாவட்ட ஆட்சியர் உடனடியாக கண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க.!