chennireporters.com

கனா காணும் காலங்களின் இளம் ராக் ஸ்டார் ஏகன் எனும் செல்லமுத்து சி.எம்

ஏகன் எனும் நடிகனின் கனவு இன்று நனவாகியிருக்கிறது.

2006-ல் இளைய தலைமுறையின் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற -கனா காணும் காலங்கள்’ சீரியலின் இரண்டாவது சீசன், தற்போது டிஸ்னி-ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெப் சீரியலாக வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதில் தனது துறுத்துறு சேட்டைகளாலும், இயல்பான நடிப்பாலும் பார்வையாளர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கிறார் ஏகன்.

பார்த்து முடித்த பலரும் பாராட்டும் வகையில் நகைச்சுவையுடன் பில்டப் செய்வதும், பின்னர் ‘பன்னு’ வாங்குவதுமாக ‘ஃபன்னான’ தனது கதாப்பாத்திர வெளிப்பாடின் மூலம் பரவலாக பேசப்பட்டு வருகிறார் இந்த சீரிஸின் சி.எம்.

பிகில் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்.இது சி.எம் ஏரியா’ என்று… அது விஜயின் கதாப்பாத்திரப் பெயர் அதேப்போல கனா கானும் காலங்களின் சி.எம் – ஏகன் என்று நெட்டிசன்கள் மீம்சிலும் ரவுண்டு கட்டுகிறார்கள்.

செல்லமுத்து என்ற தனது கதாப்பாத்திரத்தின் பெயரை சுருக்கி சி.எம்-ஆக கலக்கல் காமெடியுடன் தனது கனாவை நனவாக்கியுள்ளார்  ஏகன் சின்ன வயசுல இருந்தே நடிப்பு மேல தீராத ஆசை கொண்டவர்.

வீட்ல ஏதுனா படம் பார்த்தா, அதே மாதிரி நடிச்சு காட்டி நானும் என் தம்பியும் விளையாடுவோம். அப்படி ’கனா கானும் காலங்கள்’ டயலாக் எல்லாம் பேசி விளையாடி இருக்கோம்.

அப்படி நடிச்சிட்டு இருந்தவனுக்கு, இன்னைக்கு ‘கனா கானும் காலங்கள் – சீசன் 2’ல நடிக்க வாய்ப்பு கிடைச்சதும், அதை சிறப்பா செஞ்சிருக்கேன்னு மக்கள் சொல்றளவுக்கு பெர்ஃபாம் பன்னிருக்கிறதும், கனவு மாறியே இருக்கு.’ என்று கலகலப்பான குரலில் கூறுகிரார் இந்த ஏகன்.

கனாவிற்கு வருவதற்குள்ளான ஏகனின் பயணம் ஏக்கமும் உழைப்பும் என்று ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. நடிப்பதற்கான கனவுடன் பல கதவுகளை தட்டியவருக்கு, எந்த கதவும் திறக்கப்படவில்லை.

வாய்ப்புகள் மறுக்கப்படுவது வருத்தம் என்றால், வாய்ப்புகள் வழங்கப்படாதது மிகுந்த மன அயற்சியை ஏற்படுத்தும்.ஆனாலும் அயராமல் தேடித் திரிந்தார் ஏகன்.

இன்று இணைய உலகின் சாதனையாளர்களை தேடித்தேடி அங்கீகரிக்கும் ப்ளாக்‌ஷீப் குழுவினர்தான், இந்த வளர்ந்து வரும் நாயகனுக்கு உரமிட்டனர்.வழங்கப்பட்ட வாய்ப்பை வரமாக எண்ணி உழைத்தார் ஏகன்.

ப்ளாக்‌ஷீப்பின் மற்றொரு முன்னெடுப்பான, ‘உனக்கென்னப்பா’ யுடியூப் சேனலில் வெளியான ‘Fan boy’ சீரியலின் கதை நாயகனாக அறிமுகமானார் ஏகன்.

மஹேந்திர சிங் தோனியின் ரசிகனாக ஒவ்வொரு தெருவிலும் பேட்டும் பாலுமாக திரியும் சிறுவனாக, ஒவ்வொரு கிரிக்கெட் மேட்ச்சின் போதும் குதூகலிக்கும் இளைஞனாக, நாம் தினம் தினம் பார்த்து கடந்து செல்லும் நம்ம வீட்டு பையன்களை அசால்ட்டாக திரையில் தோன்றும் காட்சி பாராட்டுக்குறியது.

அடுத்தடுத்து இளைஞர்களின் இசையரசன் யுவன் சங்கர் ராஜாவின் ரசிகனாக நடிகர் சிலம்பரசினின் ரசிகனாக நடித்து இவர் ஏற்ற அனைத்து கதாப்பாத்திரங்களும் அத்துனை எபிசோடுகளும் இன்று லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்துக்கொண்டிருக்கிறது.

ஒரு நடிகனாக தனது இயல்பான நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். அடுத்தடுத்த நாட்களில் உனக்கென்னப்பாவின் ரேண்டம் வீடியோக்களின் கதை நாயகனாக அறிமுகமானார்.

‘உச்சா’, ‘எதிர்வீட்டு ஹீரோயினி நீ’, ‘இவன் வேற மாதிரி’ என்று வித்தியாசமான கதைக் களங்களில் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற இயல்பான கலவையான நடிப்பை வெளிப்படுத்தியதால், அந்த வீடியோக்களும் தற்போது லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

தன் திறமையின் மீது முழு நம்பிக்கை வைத்து தொடர்ந்து தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தவருக்கு, வராது வந்த மாமணியாக
அமைந்தது.

கனா காணும் காலங்கள் ஆடிஷன்.அவமானங்கள் பல கடந்துதன் திறமையாலும்
உழைப்பாலும் கிடைத்த மேடையை தவறவிடக்கூடாது என்று தீவிரமாக பயிற்சி எடுத்து ஆடிஷனில் கலந்துகொண்டு வெற்றிப்பெற்றார் ஏகன்.

ஆரம்பத்துல நான் நடிக்க வந்தப்போது என் நிறத்தையும் என் குரலையும் வைத்து பிரகாசிக்க முடியுமா என நண்பர்களே கேட்டனர்.

ஆனா அதுக்கும் என் திறமைக்கும் சம்மந்தம் இல்லைனு எனக்கு நல்லா தெரியும்.இன்னும் சொல்லப்போனா அது ரெண்டும் தான் என்னோட பலம்.

உங்கிட்ட என்ன சிறப்பு இருக்குனு கேட்ட இடத்துல இயல்பா இருக்குறதே சிறப்புதான்’னு காமிக்க நினைச்சேன்.

நான் எங்கேயோ இருக்குறத எட்டிப்பிடிக்க முடியாத கதாநாயகனா இருக்குறத விட மக்கள் தினம் தினம் பாக்குற பழகுற சாமானிய இளைஞனோட பிரதிபலிப்பா இருக்கனும்னு நினைச்சேன்.
அந்த இயல்புத்தன்மையைதான் என்னோட நடிப்புல வெளிப்படுத்தனும்னு நினைச்சேன்.

அது வொர்க் ஆகியிருக்கு.பாக்குறவங்க எல்லாம் சி.எம் கேரக்டரை பாத்தா பக்கத்து வீட்டு பையன மாறியே இருக்குனு சொல்லும்போது அதுதான் வெற்றினு தோணுது.

திறமையோட வாய்ப்புத்தேடி அலையுற ஒவ்வொரு சாமானிய இளைஞனுக்கும் நான் ஒரு சின்ன தூண்டுகோலா இருந்தா அதுவே எனக்கு பிறவிப்பயன் அடைஞ்ச மாதிரி என்று பொறுப்புணர்ந்து பக்குவமாக பேசுகிறார் ஏகன்.

தானகவே நடிப்பு கற்று, தன்னியல்பாக முயற்சி செய்து வெற்றிப்பெற போராடி, ஏகலைவனாக இன்று அதன் முதல் படியை தொட்டிருக்கிறார் ஏகன்.

கனா காணும் காலங்கள் சீசன்-2 வில் இப்படி ஒரு வசனம் பேசியிருப்பார் ஏகன்.காமெடி ஆர்டிஸ்டா போயிருந்தா பேமெண்ட்டாவது கிடைத்திருக்கும்.  ஜூனியர் ஆர்டிஸ்டா நிக்க வெச்சு பிரியோஜனம் இல்லாம பண்ணிட்டீங்களேடா.” என்று.

ஜூனியர் ஆர்டிஸ்டுகளாகவும், காமெடி ஆர்டிஸ்டுகளாகவும் இருந்தால் போதும் என்று நினைத்து சினிமாவுக்குள் வந்தவர்கள்தான் இன்று தமிழ் திரைத்துறையைக் கட்டி ஆண்டுகொண்டிருப்பவர்களாக உருமாறி இருக்கின்றனர். மகுடம் சூட வாழ்த்துக்கள் சி.எம்!…

இதையும் படிங்க.!