chennireporters.com

#election commission தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும், தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

தமிழகத்தில்  வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மக்களவைத் தேர்தலில் 98.6 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன 1.5 கோடி அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.

இந்திய நாடாளுமன்ற தேர்தல் -2024 குறித்து முக்கிய அம்சங்கள் பின்வருமாறு;

நாடாளுமன்ற தேர்தலில் 96.80 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 49.70 கோடி ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 47.10 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். 1000 ஆண் வாக்காளர்களுக்கு, 947 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

55 லட்சம் வாக்குபதிவு மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 10.50 லட்சம் வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. குற்றப் பின்னணி குறித்த வேட்பாளர்கள் 3 முறை செய்தித்தாள்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

வேட்பாளர்கள் குறித்து விபரங்களை அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பதட்டமாக வாக்குசாவடிகளில் வெப் காஸ்டிக் செய்யப்படும். எல்லைகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்.
புகார் அளிக்க மக்கள் செயலிகளை பயன்படுத்தலாம். சட்டவிரோத ஆன்லைன் பணப் பரிமாற்றம் குறித்து தீவிர கண்காணிப்பு செய்யப்படும். சூரிய மறைவிற்கு பிறகு, வங்கி ஏ.டி.எம் வாகனங்களில் பண நடமாட்டம் கூடாது.

சமுக வலைத்தளங்களில் உண்மையாக தகவல்களை விமர்சனம் செய்யலாம். தவறான தகவல்களை விமர்சனம் செய்ய கூடாது. இதனை கண்காணிக்க குழு அமைக்கப்படும். வாக்கு சாவடிகளில் துணை ராணுவத்தினர் கண்காணிப்பு. தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று (மார்ச் 16) முதல் தொடங்குகிறது.

தேர்தலில் வெறுப்பு பிரச்சாரம் இருக்க கூடாது. தனி நபர் வாழ்க்கை குறித்து விமர்சனம் செய்ய கூடாது. சாதி,மத அடிப்படையான பிரச்சாரம் செய்ய கூடாது. பணப்பட்டுவாடா, பரிசு பொருள்கள் வினியோகம் கட்டுப்படுத்தபடும். போலியான தகவல், செய்திகளை பரப்பினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நட்சத்திர பேச்சாளர்கள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் அரசியல் கட்சிகளின் வங்கி கணக்குகள் டிஜிட்டல் மாயமாக்கப்பட்டுள்ளன. இதை கண்காணித்து வருகிறோம். 2,100 தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம்.

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள், மாணவர்களை பயன்படுத்த தடை விதிப்பு. இந்திய தேர்தல் ஆணையம்.

தமிழ்நாடு நாடாளுமன்ற தேர்தல்-2024.

வேட்பு மனு தாக்கல் நாள் – 20-03-2024. வேட்பு மனு கடைசி நாள் – 27-03-2024. வேட்புமனு பரிசீலனை நாள் – 28-03-2024. வேட்பு மனு வாபஸ் நாள் – 30-03-2024.

Rajiv kumar (@rajivkumarec) / X

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.

தேர்தல் நாள்- 19-04-2024. வாக்கு எண்ணிக்கை நாள்- 04-06-2024. -தேர்தல் தலைமை ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு.

மக்களவைத் தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள கன்னியாக்குமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும்: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க.!