chennireporters.com

ஆவடி தாலுக்கா ஆபிசில் புரோக்கர் வேலை பார்க்கும் துணை தாசில்தார் செந்தில் குமார்..

ஆவடி தாலுக்கா அலுவலகத்தில் நகர்ப்புற நிலவரி திட்ட துணை (யு.எல்.சி டி.ட்டி) தாசில்தாராக வேலை பார்க்கும் செந்தில்குமார் மீது பல லஞ்ச புகார்கள் ஊழல் கண்காணிப்பு துறை அலுவலகத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டுகளாக பலம் லட்ச ரூபாய் லஞ்சப்பணமாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதற்காக அவர் பத்துக்கும் மேற்பட்ட புரோக்கர்களை தனக்கு நியமித்திருப்பது தெரியவந்துள்ளது.

ஒருவர் அரசின் நிலத்தை கையகப்படுத்தி பல ஆண்டுகளாக ஆண்டு அனுபவித்து வருவார். அந்த இடத்தை வேறு ஒருவருக்கு கிரைய பத்திரமும் செய்து கொடுத்திருப்பார் ஆனால் அந்த இடத்திற்கு அரசின்  நிலப்பட்டா இருக்காது. அதனால் சம்பந்தப்பட்ட நபர் நிலபட்டா கேட்டு தாசில்தாரிடம் விண்ணப்பம் செய்வார் அதை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து பட்டா வழங்குவார்கள் . இது தான் பட்டா வழங்கும் நடை முறை.

அதாவது அவர் ஆண்டு அனுபவித்து வரும் இடம் எவ்வளவு என்பதை கணக்கிட்டு அதாவது ஒரு சதுர அடிக்கு அரசின் மதிப்பு எவ்வளவு தொகை  நிர்ணயித்து இருக்கிறார்களோ அந்த பணத்தை சம்பந்தப்பட்ட நபர் டிடியாக அரசுக்கு தர வேண்டும் அதன் பிறகு அதிகாரிகள் ஆய்வு செய்து விண்ணப்பம் செய்தவருக்கு பட்டா வழங்குவார்கள்.

ஆனால் ஆவடி தாலுக்கா அலுவலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையரின் கவனத்திற்கு போகாமலேயே தன்னிச்சையாக துணை தாசில்தார் செந்தில்குமார் தன்னுடைய புரோக்கர்கள் மூலம் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளரிடம் பேரம் பேசி ஒரு தொகையை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு அவரே தன்னிச்சையாக அதிகாரிகள் துனையுடன் பட்டா வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது பூந்தமல்லியில் உள்ள நகர நிலவரி திட்ட அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுடன் செந்தில்குமார் கைகோர்த்துக்கொண்டு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்கு நிலத்தை கையகப்படுத்தவில்லை என்று தடையில்லா சான்று வாங்கி தருவதற்கு ஒரு ரேட் பேசி தடையில்லா சான்றும் வாங்கித் தந்து பட்டா வழங்கி விடுவார் செந்தில்குமார்.  இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட கோப்புகளில் லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசின் விதிமுறைகளுக்கு எதிராக பட்டா வழங்கியுள்ளார் செந்தில்குமார்.

சர்வேயர்களுக்கு பட்டா கேட்டு  வரும் ஃபைல்களையும்  நானே முடித்து கொடுக்கிறேன் என்று நூற்றுக்கும் மேற்பட்ட ஃபைல்களை இந்த செந்தில் குமார் முடித்து கொடுத்து அதற்கும் தனியாக ஒரு கல்லா கட்டி இருக்கிறார்.உதாரணத்திற்கு திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் கென்னடி வார்டு நம்பர் டி பிளாக் நம்பர் இரண்டு டவுன் சர்வே நம்பர் 13/1 புல எண் 49/ ஏ கொண்ட 1200 சதுர அடி வீட்டு மனைக்கு பட்டா கேட்டு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மனு செய்திருந்தார் .அடங்களில் அந்த இடத்திற்கு பட்டா இல்லை ஆனால் இவரிடம் சிட்டா அடங்கள் உள்ளிட்ட ஆவணங்களில் தேவ அன்பு என்பவர் பெயர் இடம் பெற்றுள்ளது . இவர் தான் அந்த இடத்தில் முதல் உரிமையாளர் ஆனால் அந்த இடத்திற்கு பட்டா இல்லை. தேவ அன்பு தன்னுடைய இடத்தை கென்னடி என்பவருக்கு விற்று விட்டார். கென்னடி நிலத்தை வாங்கிய பிறகு அந்த இடத்திற்கு பட்டா இல்லை என்பதால் அரசின்  பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் இந்த இடம் அரசின் இடமாக பல ஆவணங்களில் இருக்கிறது. இருப்பினும் அந்த இடம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை  ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று சரி செய்து எடுத்து வரும் படி மேற்படி ஃபைலை  தாசில்தார் அனுப்பி விட்டார்.இந்த நிலையில் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் விசாரித்து பட்டா கொடுப்பதற்கு முயற்சித்த வேலையில் துணை தாசில்தார் செந்தில்குமார் சில புரோக்கர்கள் துணையுடன் மேற்படி நிலத்தின் உரிமையாளரிடம்  பேரம் பேசினார்கள். ஆனால் பேரம் படியாததால் இவர் ஆர்டிஓ ஆபீசில் உள்ள ரம்யா என்ற  ஊழியரிடம் மேற்படி இடம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற பைலை முடித்து கொடுத்து விடுங்கள் மீதி வேலையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி செக் வைத்து விட்டார் செந்தில் குமார். சம்பந்தமே இல்லாத இது போன்ற பல விஷயங்களில் செந்தில்குமார் தலையிட்டு பட்டா கேட்டு வரும் பொது மக்களை மிரட்டி புரோக்கர்கள் மூலம் லஞ்சம் வாங்கி வருகிறார். ஒரு வருடமாக அலைந்து திரிந்த மேற்படி நபர் தன்னுடைய இடத்திற்கு பட்டாவே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டாராம்.இப்படி கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பல லட்சம் ரூபாய் பணத்தை லஞ்சமாக பெற்றுள்ளார் என்று சொல்லுகிறார்கள் சில புரோக்கர்கள்.  அது தவிர இவருக்கு வருவாய் ஈட்டி தரக்கூடிய இவர் விருப்பமுள்ள சில ஃபைல்களை இவர் தன்னுடைய  புரோக்கர்கள் மூலம் பெற்று அதற்கு அதிகாரிகள் துணையுடன் பட்டா வழங்கி வருகிறார் செந்தில்குமார் இது குறித்து திருவள்ளூர் மாவட்ட அறப்போர் இயக்கத்தினர் வருவாய் நிர்வாக ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள் அது தவிர லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கும் புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.இவர் ஏற்கனவே பொன்னேரியில் துணை தாசில்தாராக இருந்த பொழுது இவர் ஆடிய ஆட்டம் சொல்லி மாளாது என்கிறார்கள். கொரோனா தடைக்காலத்தில் ஒரு தாசில்தாருடன் சேர்ந்து கொண்டு வெளிமாநில மக்களை அவர்கள் ஊருக்கு அனுப்புவதில் பல லட்ச ரூபாயை திருட்டு கணக்கு எழுதி போலியான சில ரசீதுகளை வைத்து பல லட்ச ரூபாய் கொள்ளை அடித்ததாக சொல்லுகிறார்கள். அது தொடர்பாக அப்போதைய கலெக்டராக பணியாற்றிய பொன்னையா அவர்களுக்கு பல புகார்கள் அனுப்பி இருக்கிறார்கள் பொன்னேரி கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள்.

கல்லா கட்டுவதிலும் கட்டிங் போடுவதிலும் அரசு கோப்புகளை அதிகாரிகளுக்கு தெரியாமல் திருத்தி காசு சம்பாதிப்பதில் செந்தில்குமாருக்கு நிகர் திருவள்ளூர் மாவட்டத்திலேயே இவருக்கு நிகர் யாருமே இல்லை என்கிறார்கள் வருவாய் துறை ஊழியர்கள். இந்த செய்தி தொடர்பாக துணை தாசில்தார் செந்தில்குமார் விளக்கம் அளித்தால் அதை நாம் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!