chennireporters.com

எலி தன் தவறை உணர்ந்து விட்டது. ஆனால் மனிதர்கள்?

கடந்த 2015ம் ஆண்டு வெள்ளத்திற்கு பிறகு இந்த ஆண்டு கடுமையாக மழை பெய்து வருகிறது.

எப்போதுமே நிறையாத பாலாற்றில் வெள்ளம், வெள்ளத்தில் சிக்கிய திருப்பதி பெருமாள், திருச்செந்தூர் முருகன் இப்படி பல கோயில்கள் நிரம்பி வழிந்த ஏரிகள், அணைகள் என தண்ணீரில் மிதக்கிறது தமிழகம்.

அரசு புறம்போக்கு இடங்கள் ஆக்கிரமிப்பு குறிப்பாக கால்வாய் , குட்டை, குளம், ஏரி, பாட்டை,கோயில் இடங்கள் என அனைத்து இடங்களிலும் சில நில புரோக்கர்கள் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பத்திரப்பதிவு அலுவலர்களுடன் சின்டிகேட் வைத்து கொண்டு பிளாட் போட்டு விற்பனை செய்தனர் .

அது தவிர அடுக்கு மாடி குடியிருப்பு களாகவும் கட்டி காசு பார்த்ததால் இன்று தண்ணீரில் கண்ணீரில் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பொது மக்கள் குறைந்த விலையில் இடம் கிடைக்கிறது என்று இடத்தை ஆராய்ந்து பார்க்காமல் வாங்க கூடாது.

என்பதை இப்போதாவது மக்கள் உணர வேண்டும்.எலி வலையாக இருந்தாலும் தனி வலையாக இருக்க வேண்டும் என்று ஒரு பழமொழி இருக்கிறது.

அதற்காக பள்ளத்தில் வளை வைத்தால் இப்படித்தான் வெள்ளத்தில் மிதக்க வேண்டும் என்பதை எலி தன் தவறை உணர்ந்து விட்டது.

மனிதர்களாகிய நீங்கள்…?

இதையும் படிங்க.!