chennireporters.com

உலக கோப்பை கிரிகெட் வெல்லப்போவது யார்? மனம் திறந்த ஆஸ்திரேலியா வீரர் மிச்சல் மார்ஸ்

ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்லப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர் மிச்சல் மார்ஸ் விளையாட்டாக சொன்ன ஒரு செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2023 ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சுமார் ஒரு மாதத்திற்கு மேல் நடைபெற்று  வருகிறது. தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் நாளை  மோத போகிறது .

ஆனால் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மிச்சல் மார்ஸ் 6 மாதத்திற்கு முன்பே இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தான் இறுதிப் போட்டிக்கு மோதும் என்று கூறியிருந்தார். அவர் சொன்னது போல் தற்போது இரு அணிகளும் இறுதியில் மோதுகிறது.

ஆனால் இறுதிப் போட்டியில் என்ன நடக்கும் என்று ஒரு கணிப்பையும் அவர் வெளியிட்டு இருந்தார். அதைக் கேட்கும் போது தான் நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த கணிப்பை அவர் நகைச்சுவைக்காக தான் சொன்னார் அது என்னவென்று தற்போது பார்க்கலாம். கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக மிச்சல் மார்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது உலகக்கோப்பை தொடர் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி கேட்டார்கள். அதற்கு பதில் அளித்த மிச்சல் மார்ஸ், இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும். இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 450 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து இருக்கும். அதன் பிறகு களம் இறங்கும் இந்தியா 65 ரன்கள் ஆட்டம் இழக்கும் என்று கூறி இருந்தார்.

இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை பெறாத அணியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனை மிச்சல் மார்ஸ் கடந்த மே மாதம் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்டது போல் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் இரண்டு அணிகளிடம் தோற்றது.  இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லீக் சுற்றில் தோல்வி அடைந்தது.

மிச்சல் மார்ஸ் கணித்தது போல் இந்தியா தான் தோல்வி அடையாமல்  வெற்றிகளை குவித்து வருகிறது. இதனால் இந்தியா தான் 450 ரன்கள் குவிக்கும் என்றும் ஆஸ்திரேலியா அணி வெறும் 65 ரன்கள்  மட்டுமே எடுத்து ஆட்டம் இழக்கும் என்றும் ரசிகர்கள் மார்ஸின் பழைய கணிப்பை சமூக வலைதளங்களில்  பகிர்ந்து தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது. ஆனால் மிச்சல் மார்ஸ் இந்த கணிப்பை ஒரு நகைச்சுவையாக தான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!