chennireporters.com

மூன்று லட்சம் சிலைகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசுக்கு பொன்மாணிக்கவேல் வேண்டுகோள்.

தமிழக முன்னாள் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி .பொன் மாணிக்கவேல் இன்று சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் தமிழகத்திலுள்ள சுமார் 290 கோயில்களுக்குச் சென்று தனிப்பட்ட முறையில் அங்குள்ள சிலைகளின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டேன்.

மேலும், தமிழகத்தில் உள்ள 10 ஆயிரம் தொன்மையான கோயில்களில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் சிலைகள் பாதுகாப்பாக இல்லாமல் இருப்பதாகவும் அச்சிலைகள் அனைத்தும் தொன்மையானது என்று கூறினார்.

எனவே அந்த சிலைகளை ஆவணப்படுத்தப் படுத்தி பதிவு செய்யப்படவேண்டும் என கூறினார்.கோயில்களில் உள்ள சிலைகளை முறையாக கணக்கெடுப்பு இல்லாமலும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதே சிலைக் கடத்தலுக்கு காரணமாக அமைகிறது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், தனது சார்பில் தமிழகத்திலுள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் சிலைகளை தொன்மையானது என ஆவணப்படுத்தி, பதிவு செய்யும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் திருக்கோயில்களில் சிலைகளை பாதுகாக்க பாதுகாப்பு அறை அமைக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் மதிக்காமல் இருந்ததாகக் குற்றஞ்சாட்டிய அவர், பாதுகாப்பு அறைகளை திரிக்கோயில்களில் உருவாக்குவது அவசியம் என்பதையும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க.!