chennireporters.com

இலங்கையில் பொருளாதார பேரழிவிற்கு என்ன காரணம்?

இலங்கையில் ஆட்சியாளர்கள்,தன் நாட்டில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அனைத்து துறைகளிலும் அந்நிய நாட்டிற்கு வழி விட்டதால் பொருளாதார சுரண்டல் நடந்தது.

அன்னிய நாட்டு முதலாளிகளால், இலங்கை வேளாண் மக்களின் விளைநிலங்கள் பிடுங்கப்பட்டு பன்னாட்டு முதலாளிகளுக்கு சென்றது.அந்த நிலங்களில் வேளாண்மை நடைபெறாமல் மற்ற தொழில்களை அங்கு ஆரம்பித்தனர் பன்னாட்டு முதலாளிகள்.

இலங்கை ஆட்சியாளர்கள் நாட்டின் பொருளாதாரத்தின் மீது கவனம் செலுத்தாமல் சுய தம்பட்டம்,விளம்பரம் செய்துகொண்டு சொகுசாக வாழ ஆரம்பித்தனர் மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

ஆலைகளில் கவனம் செலுத்தாமல் ஆலயங்களில் கவனம் செலுத்தினார்கள். நாட்டுமக்கள் கஷ்டப்படும்போது இலங்கை ஆட்சியாளர் பல கோடி ரூபாய் செலவில் தனக்கென விமானங்கள் வாங்குவதும், சொகுசு வீடுகளும் கட்டுவதும், சொகுசாக வாழ்வதுமா க இருந்தார்கள்.

இலங்கை முழுவதும் நிர்வாகம் அன்னிய நாட்டு சக்திகளின் கையில் சென்று விட்டது.
அந்நிய முதலாளிகள் முடிந்தவரை இலங்கை பொருளாதாரத்தை சுரண்டி விட்டு பிரச்சனை வந்ததும் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்.

இலங்கை ஆட்சியாளர்கள்,இலங்கை மக்களை பெரும்பான்மை சிங்களவர்கள், சிறுபான்மை முஸ்லிம்கள், கிருத்துவர்கள், தமிழர்கள் என பாகுபடுத்தி, மக்களிடையே பிளவை ஏற்படுத்திசிறுபான்மையினரை அழிக்கும் செயலில் இறங்கினர்.

தமிழர்கள் வாழும் பகுதியில் சிங்கள தீவிரவாதிகளை குடி அமர்த்தினர்.மக்கள் நல சட்டங்கள்,தொழிலாளர் நல சட்டங்கள் நீக்கப்பட்டுபெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு
ஆதரவாக ஆட்சியாளர்கள் செயல்பட்டனர்.சிங்கள இனவாதம், சிங்கள மொழி வாதம், பேசிக்கொண்டும்,இருந்தார்கள்.

ஆட்சியாளர்கள் சிறந்த நிர்வாகத்தை கொடுக்க, அறிவுப்பூர்வமான அதிகாரிகளை பக்கத்தில் வைத்து கொள்ளாமல்,ஜோசியர்களையும்,மத குருமார்களையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு அவர்கள் கூறியபடி ஆட்சி நடத்தினார்கள்.இதனால் ஜோசியர்களும், மதகுருமார்களும்செழித்தார்களே தவிர,மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டார்கள்,

இலங்கை ஆட்சியாளர்களின் தவறான கொள்கையினால் நாட்டில் பெரும் பொருளாதார பிரச்சனை ஏற்பட்டு மக்கள் வாழ்நிலைபாதிக்கப்பட்டுவிட்டது.

மதத்தை வைத்து ஆட்சி நடத்திய இலங்கை ஆட்சியாளர்களை புரிந்து கொண்ட அனைத்து மக்களும் இன்று ஓரணியில் திரண்டு ஆட்சியாளருக்கு எதிராக இன்று
வீதியில் நின்று போராடுகின்றார்கள்.

இலங்கை பொருளாதாரத்தை சுரண்டி வெளியேறிய அந்த அன்னிய நாடுகள் இன்று இலங்கைக்கு உதவ முன்வரவில்லை.இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா, இலங்கை மக்களை காக்க நேசக்கரம் நீட்டி உள்ளது.

இலங்கையின் இன்றைய நிலை,அனைத்து நாடுகளுக்கும் படிப்பினை…..?
எச்சரிக்கை….?இலங்கை மக்கள் படும் கஷ்டத்தை படித்துவிட்டு,தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு சுலபமாக கடந்து சென்று விடுகிறோம்.சிலர் கிண்டலும் செய்கிறார்கள்.

இது அனைவருக்குமான எச்சரிக்கை என்பதை உணராமல்.

ஆலைகளை மூடிவிட்டு ஆலயங்கள் திறந்தால் நாடு உருப்படாது!
 வேளாண்மை தான் அனைத்து உயிர்களையும் காக்கும்!
 ஒரு நாட்டில் விவசாயி மன நிம்மதியுடன் வாழ்ந்தால்தான் அந்த நாடு செழிப்புறும்.
மக்கள் அமைதியுடன் வாழ முடியும்!
 ஏனெனில் குடிக்க தண்ணீரும்,
உண்பதற்கு அரிசியும் கோதுமை தானே தேவை!
 பெட்ரோலை குடிக்கவோ,
தங்கத்தை உண்ணவோ முடியாது!
 கொள்ளை நோயும்,
பொருளாதாரப் பின்னடைவும் ஒன்றே!
இது அனைத்து நாடுகளையும் தாக்கும்!
 மக்களும், ஆட்சியாளர்களும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது!
 ஏனெனில் சாதி – மதம் சோறு போடாது!
 சாதியும் மதமும் மனிதனுக்கு கேடு!
 அறிவு தான் அனைத்திற்கும் தீர்வு!

இலங்கை மக்கள் கஷ்டங்கள் நீங்கி,சகஜ வாழ்விற்கு வரஅனைத்து நாடுகளும் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

நான் படித்ததில் பிடித்தது, உங்களுடன் பகிர்கின்றேன். சீர்காழி ராம்குமார்

இதையும் படிங்க.!