chennireporters.com

#theni savukku arrest தேனி பழைய பப்பீஸ் லாட்ஜியில் சவுக்கு சங்கர் நள்ளிரவில் கைது.

#சிறப்பு செய்தி

தமிழக காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலிசார் கைது செய்து கோவைக்கு அழைத்து சென்றனர். சவுக்கு சங்கர் சமூகவலைதளங்களில் தொடர்ந்து, அரசியல் ரீதியாகவும் அரசு தொடர்பாகவும் தன் கருத்துகளை பதிவு செய்து வருபவர். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் காவல்துறை அதிகாரிகள் குறித்து, முக்கியமாக பெண் காவலர்கள் குறித்து அவதூறான  வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக புகார் எழுந்தது.

Cyber Crime Wing - Tamil Nadu

இது தொடர்பாக கோவை சைபர் க்ரைம்  போலீஸ் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதையடுத்து இன்று நள்ளிரவு 2 மணியளவில் தேனி மாவட்டம் தேனி நகரில் பூதிபுரம் அருகை உள்ள பழைய பப்பீஸ்  விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீஸ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சங்கரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

கோவை நோக்கி வந்துகொண்டிருந்தபோது, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அவர்கள் வந்த வாகனம் விபத்தில் சிக்கியது.  கோவை சைபர் க்ரைம் போலீஸ் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்த போலீஸ் திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸ் திட்டமிட்டுள்ளனர்.

சென்னையிலேயே சுற்றி தெரியும் சவுக்கு சங்கர் தேனிக்கு சென்றது ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது காவல்துறை.

தேனி மாவட்டத்தில்  உள்ள சில தொழிலதிபர்களை மிரட்டி  இவர்  பணம்  கேட்டதாக புகார் எழுந்துள்ளது.

அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள கே எம் சி என்கிற நிறுவனத்தின் உரிமையாளர் முத்து கோவிந்தன், ஓபிஎஸ் சின் பினாமிகள் பாண்டியராஜன் இன்னும் பல சிலரை சவுக்கு சங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிரட்டி பணம் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக தேனிக்குச் சென்ற சவுக்கு சங்கருக்கு தேனியில் பிரசித்தி பெற்ற பிராத்தல் செய்யும் லாட்ஜ் பப்பிஸ் என்னும் ரிவேரா  லாட்ஜில் ஒரு நிருபர் அறை எடுத்து கொடுத்துள்ளார். அங்கு இருந்தபோது சில உல்லாச பிரதிநிதிகளிடம் சவுக்கு சங்கர் கஞ்சா போதையில் சந்தோஷமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நள்ளிரவில் கதவைத் தட்டியதும் அலறிய சவுக்கு சங்கர் தனது அறையில் இருந்த மைமாக்கள் பற்றி வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் செல்போனில் படம் பிடிக்க வேண்டாம் என்றும் அழுது கெஞ்சி கூத்தாடியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அறையில் இருந்த அந்த மைமாக்களை வெளியே துரத்தி விட்டு சவுக்கு சங்கர் உடன் வந்து அவரது ஓட்டுநர் அவரது உதவியாளர் என மூவரையும் கைது செய்த போலீசார் பழனி செட்டிபாளையம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்று அழைத்துச் சென்றனர்.

அதன் பிறகு சவுக்கு சங்கர் சென்ற இன்னோவா காரையும் பறிமுதல் செய்த போலீசார் பழனி செட்டிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கிருந்து டெம்போ டிராவலரில் கோவைக்கு சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 294b , 509 , 353 ஐ.பி.சி. பெண் வன்கொடுமை பிரிவு,  தகவல் தொழில் நுட்ப சட்டப்பிரிவு 67 இன் படி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதும் சமூக வலைதளங்களில் அவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததைப் போன்ற படங்களை வைரலாக்கி வருகின்றனர். சிலர் அவர் கைகூப்பி போலீசாரை கெஞ்சுவதை போலவும் படங்களை பகிர்ந்து வருகின்றனர். சவுக்கு சங்கரிடம் தொடர்பில் இருக்கும் டுபாக்கூர் பத்திரிகையாளர்கள் பற்றி போலீசார் செல்போன் ரெக்கார்ட் மூலம் ஆய்வு செய்து வருவதாக சொல்லுகின்றனர் கோவை சைபர் கிரைம் போலீசார். சவுக்கு சங்கருடன் தொடர்பிலிருக்கும் சில யூ டியூப் சேனலை சேர்ந்தவர்களையும் போலிசார் தேடி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் ஒரு சிலர் கைது செய்யப்படுவார்கள் என்கின்றனர் காவல்துறையினர்.

கடந்த மே 4 ஆம் தேதி தேனியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அது குறித்து நாம் நமது இணையதளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம் அதில் தேனி மாவட்ட பிரஸ் கிளப் பொறுப்பாளர்கள் குறித்து நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம். இதுகுறித்து தேனி மாவட்ட பிரஸ் கிளப் தலைவர் ராதாகிருஷ்ணன் அவர் தரப்பு விளக்கத்தை அவரது சங்க அலுவலக லெட்டர் பேடில் விளக்கம் அளித்துள்ளார். தாங்கள் குறிப்பிட்டுள்ளபடி எங்களுக்கும் செய்தியில் குறிப்பிட்டுள்ள நபர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்கள் சங்கத்தின் பெயரையும் எங்களது வளர்ச்சியும் பிடிக்காதவர்கள் யாரோ தவறுதலாக பொய்யான தகவலை தங்களுக்கு கூறியிருக்கிறார்கள். எனவே எங்களது பெயருக்கும் புகழுக்கும் கலங்கும் விளைவிக்கும் நபர்கள் குறித்து நாங்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்துக் கொள்கிறோம். நீங்கள் செய்தியில் குறிப்பிட்டிருந்த எங்களது சங்கத்தின் பெயரையும் பத்திரிகையாளர்களின் பெயரையும் நீக்க வேண்டும் என்று நாங்கள் எங்கள் சங்கத்தின் சார்பாக உங்களுக்கு கோரிக்கை வைக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் தரப்பு விளக்கத்தை ஏற்றுக் கொண்டு நமது ஆசிரியர் குழு செய்தியில் குறிப்பிட்டு இருந்த அவர்களின் பெயர்களை நீக்க முடிவு செய்து இருக்கிறது.

இதையும் படிங்க.!