தமிழக போலீஸ் அதிகாரி ஒருவர் பற்றியும் பெண் போலீஸ் அதிகாரிகளை பற்றியும் அவதூறாக பேசும் வகையில் சவுக்கு சங்கர் youtube தளம் ஒன்றில் பேசியிருந்தார் . அது தொடர்பாக கோயம்புத்தூர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேனியில் உள்ள பழைய பப்பிஸ் லாட்ஜில் தங்கி இருந்த சவுக்கு சங்கர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் கோயம்புத்தூர் கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமிக்கும் சவுக்கு சங்கருக்கும் என்ன தொடர்பு என சமூக வலைதளங்களில் பலர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
சவுக்கு சங்கர்
இந்த நிலையில் லென்ஸ் தமிழ்நாடு என்ற யூடியூப் சேனலில் செய்தியாளர் மதன் ரவிச்சந்திரன் என்பவர் சவுக்கு சங்கரின் நடத்தி வரும் சவுக்கு மீடியா இணையதளத்தில் அலுவலகத்தில் உள்ளே புகுந்து ஸ்டிங் ஆபரேஷன் மூலம் பல்வேறு தகவல்களை திரட்டி தனது youtube தளத்தில் வெளியிட்டு வந்தார்.
லென்ஸ் தமிழ்நாடு மதன் ரவிச்சந்திரன்.
அதில் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்தார். எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டும் வகையில் சவுக்கு சங்கர் பல்வேறு ரகசிய வீடியோக்களை வைத்திருக்கிறார் என்று குற்றம் சாட்டியிருந்தார். அதனை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி சவுக்கு சங்கரின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்.
சவுக்கு சங்கர் கடந்த காலங்களில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சொல்ல முடியாத வார்த்தைகளில் விமர்சனம் செய்து தனது எக்ஸ் தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் ஓ பி சி பிரிவின் மாநில செயலாளர் கே ஆர் வெங்கடேசன் என்பவர் கடும் கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். பல்வேறு தரப்பினர் சவுக்கு சங்கர் கைது நியாயப்படுத்தியும் பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து எழுதி வருகின்றனர். இந்த நிலையில் சவுக்கு சங்கர் நிறுவனத்தில் பணியாற்றும் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் சவுக்கு சங்கர் அலுவலகத்திலிருந்து பணியாற்றிய சிலர் அங்கிருந்து வெளியேறி சவுக்கு சங்கருக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். சவுக்கு சங்கரால் பாதிக்கப்பட்ட பலர் போலீசில் புகார் அளித்துள்ளனர்
சவுக்கு சங்கர்
அந்த புகாரின் அடிப்படையில் தான் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார் என்கின்றனர் கோவை சைபர் கிரைம் போலீசார். ஏற்கனவே அவரது முதல் மனைவி பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு இழப்பீடு தராமல் அவர் காலம் தாழ்த்தி வருகிறார் அவர் ஒரு வழக்கறிஞராக இருந்தும் கூட பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு இந்த சமூகம் நீதி நியாயம் பெற்று தரவில்லை.
ஆனால் ஒரு சமூகத்தை ஏமாற்றி எல்லா விதமான பிராடுத்தனங்களை செய்யும் ஒருவரை இந்த சமூகம் கொண்டாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.