சென்னை அண்ணா நகரில் காவல் துறை துணை ஆணையராக இருந்த ரோகித் ராஜகோபால் திடீரென கோவை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அவர் மாற்றப்பட்டது குறித்தும் அதற்கான காரணங்களையும் சொல்லுகிறார்கள் உளவுத்துறை காக்கிகள் சிலர். கடந்த ஒரு ஆண்டாக அண்ணாநகர் டிசியாக ரோகித் பணியாற்றி வந்தார்.
அண்ணா நகர் சென்னையின் ஆர்ட் ஆப் தி சிட்டி இந்த பகுதியில் நடக்காத பிசினஸ்களே இல்லை எனலாம். கஞ்சா, பிரவுன் சுகர் , கொக்கேன் என எல்லாம் ஈசியாக கிடைக்கும். அண்ணா நகரில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்த டி.சி. ரோஹித் நைஜீரியாவை சேர்ந்த ஒருவர் கோயம்பேடு செனாய் நகர் பகுதியில் ஒரு பையுடன் சுற்றி வருவதாக உளவுத்துறை கொடுத்த தகவலை அடுத்து அந்த கருப்பு மனிதரை தட்டி தூக்கினார்.
போலிஸ் விசாரணையில் ரோகித் போதைப் பொருள் விற்பதை கண்டுபிடித்து அவரது கூட்டாளிகள் அனைவரையும் தூக்கி லாடம் கட்டினார் ரோகித். அவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு அந்த நபர் வெறும் கேங்மேன் மட்டுமே அவருக்கு பின்னால் சூர்யா நடித்த ஐயன் படத்தில் வருவதைப் போல ஒரு கேங் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வளவு பெரிய டீமை பார்த்த ரோகித் ஆடிப் போனார் மேலும் கோலிவுட்டில் உள்ள சில சினிமா விஐபிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. நைஜீரிய இளைஞரிடம் போலீஸ் நடத்திய பன்றிக்கட்டு விசாரணையில் அவர் சில கஸ்டமர்களின் பெயரைக் கூறியுள்ளார். அதில் குறிப்பாக ஒரு நடிகையின் பெயரையும் சில நடிகர்களின் பெயரையும் கூறியுள்ளார். இதை அடுத்து ரோகித் தன்னுடைய விசாரணையில் ஒரு நடிகையை மட்டும் டார்கெட் செய்து விசாரிக்க தொடங்கியுள்ளார்.
அந்த நடிகை தமிழகத்தின் இளைய விஐபியிடம் ரோகித்தின் முரட்டு தனமான விசாரணைப்பற்றி முறையிட்டுள்ளார். அதன் பிறகு ரோகித் திடீரென கோயம்புத்தூருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு ரோகித்தின் முந்தைய கால செய்திகளை அடுக்கடுக்காக சொன்னார்கள் உளவுத்துறையினர். ரோகித் வேலை செய்யும் இடங்களில் எல்லாம் சர்ச்சையில் சிக்குவது தான் அவரது ஸ்டைல். வெறும் கையோடு போய் அள்ளிக் கொண்டு வருவது அவரது தனி சிறப்பு. சிவகங்கையில் எஸ்பியாக இருந்த போது அப்போதைய அதிமுக விஐபி ஒருவருக்கும் உயர் போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் பல டீலிங் இருந்தது. ரோகித் அதை தெரிந்து கொண்டு தனக்கு ஏதும் பங்கு தரவில்லையே என ரோகித் இடையில் புகுந்து ஆடுபுலி ஆட்டம் ஆடி மணல் கொள்ளையர்களிடம் நேரடியாகவே டீலிங் பேசி தனக்கான பங்கை பெற்றுக்கொண்டாராம்.
தனக்கான பங்கை கேட்டு வாங்கிக் கொண்ட ரோகித் உயர் அதிகாரிக்கும் அந்த அதிமுக விஐபிக்கும் இருந்த நட்பில் விரிசல் விட ஆரம்பித்தது. இதனால் நஷ்டம் அடைந்த அந்த இருவர் கூட்டணி ரோகித்தை போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு மாற்றினார்கள். அங்கு போன ரோகித் சும்மா இருக்காமல் தனது வசூல் வேட்டையை வசாலமாக தொடங்கினார். கல்லா கட்டுவதில் கைதேர்ந்த ரோகித்தை அங்கிருந்து மயிலாப்பூருக்கு மாற்றி இருக்கிறார்கள். அங்கு ஏகப்பட்ட பஞ்சாயத்து சிஎம் கான் வேயில் குளறுபடி செய்த காரணத்தினால் அண்ணாநகருக்கு மாற்றப்பட்டார்.
அண்ணா நகருக்கு வந்ததும் அடங்கவில்லை. லஞ்சப்பணம் கொட்டுகிற இடம் . கரும்புத்திண்ண கூலியா கட்டிங் வரும் இடங்கள் எதுவென்று கணக்கெடுத்து கல்லா கட்ட தொடங்கினாராம். ஏற்கனவே முத்தான சாமி எப்படி கல்லா கட்டினார் என்பதை கேட்டு தெரிந்து கொண்ட ரோகித் , பப்புகள் ,பார்கள், ஸ்பாக்கள், லாட்ஜ் என எக்கச்சக்கமாக பூந்து விளையாடிய ரோகித் சில இடங்களில் படுத்து ஓய்வும் எடுத்தாராம். முக்கியமாக போதை மருந்துகளை கைப்பற்றும்போது தன் பங்கிற்கு எடுத்து வைத்துகொண்டு அதன் அளவை குறைத்து காட்டியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுவும் அவர் டிரான்ஸ்பராக ஒரு காரணம் என்கிறார்கள். இப்போது அவர் மாற்றப்பட்டுள்ள கோவை வடக்கும் லேசுப்பட்ட இடம் அல்ல வளமான ஏரியா தான் இவர் அங்கு பொறுப்பேற்றதற்கு இரண்டு நாட்கள் முன்பு தான் பீளமேடு காவல் நிலைய எல்லைக்குள் வரும் ஒரு அப்பார்ட்மெண்டில் துப்புரவு பணியாளர் ஒருவர் கழிப்பறை தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி மரணம் அடைந்தார்.
இந்த விவகாரத்தை சரி செய்ய 30 L வரை வசூல் செய்யப்பட்டதாம். அப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள் அங்குள்ள உளவுத்துறை காக்கிகள். அதிலும் இவரது தலையீடு இருந்ததாக சொல்கிறார்கள். நேர்மையாக, கடமை , கண்ணியத்துடன் பணியாற்ற ரோகித் விரும்ப மாட்டாராம். தமிழ் நாட்டில் எந்த ஐபிஎஸ் அதிகாரியும் யோக்கியமானவர்கள் கிடையாது போய் வேலையை பாருங்க என்று சொல்வாராம்.
ரோஹித்துக்கு சொந்தமாக சென்னை மடிப்பாக்கம் ஆழ்வார்பேட்டையில் கெஸ்ட் ஹவுஸ் போல இரண்டு பெரிய வீடுகள் உள்ளதாம். ஒவ்வொரு வார இறுதியிலும் டெல்லியில் உள்ள முக்கிய அதிகாரிகள் பலர் இங்கு வந்து தான் ஜாலியாக இருந்து விட்டு போவார்களாம்.
அண்ணா நகர் டி.சி அலுவலகத்தில் அழகா ஒல்லியான உருவம் கொண்ட பெண் எஸ்.ஐ.யும் தங்கமான கான்ஸ்டபிள் ஒருவரும் தான் இவரது வசூல் ஏஜெண்டுகளாக பணியாற்றி வந்தார்களாம்.
அவர்கள் அடிச்ச கட்டிங்கை சொன்னா தலை கிருகிருத்திடும் என்கின்றார். அங்குள்ள ஒரு அழகு மனிதர். இந்த செய்தி குறித்து உளவுத்துறை அதிகாரிகள் தனியாக ஒரு நோட்டு போட்டு அனுப்பி இருக்கிறார்கள் இந்த செய்தி ஐபிஎஸ் அதிகாரிகள் whatsapp குழுவில் காட்டுத் தீயாய் பரவி வருகிறதாம்.