chennireporters.com

வேலூர் சரக டி.ஐ.ஜிக்கு மாமுல் தரும் தனிப்பிரிவு எஸ்.ஐ. பந்தா காட்டும் பத்ராச்சலம்.

வேலூர் சரக டிஐஜி பெயர் சொல்லி பந்தா காட்டும் தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பத்ராசலம் மீது டிஐஜி முத்துசாமி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று கேட்கிறார்கள் திருப்பத்தூர் மாவட்ட  தனிப்பிரிவு அதிகாரிகள். ஆலங்காயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக நடக்கும் எல்லா சம்பவங்களுக்கும் இவரே துணையாக நின்று முதுகெலும்பாக செயல்பட்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்புகின்றனர் அந்த பகுதி பொதுமக்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பல பகுதிகளில் கள்ளச்சாராயம், கஞ்சா, போலி மதுபானம் என A TO Z  எல்லாம் கிடைக்கிறது. வியாபாரமும்  கொடிகட்டி பறக்கிறது. இதை தடுக்க  வேண்டிய காவல் துறை சத்தம் இல்லாமல் கமிஷன் வாங்கிக்கொண்டு  கண்டும் காணாமல் இருக்கிறது.  சட்டத்திற்கு புறம்பான எல்லா வேலைகளும் சமூக விரோத கும்பல் சத்தம் இல்லாமல் செய்து வருகிறது.ஆலங்காயம் காவல் நிலையத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வருபவர் பத்ரா என்கிற பத்ராச்சலம் தனி பிரிவில் எஸ் எஸ்.ஐ யாக  பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கண்ணகி வாணியம்பாடி மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ. யாக பணியாற்றி வருகிறார்.பத்ரா (எ) பத்ராச்சலம் தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர்.

சில தினங்களுக்கு முன்பு டிஐஜி முத்துசாமி ஒரே நேரத்தில் மூன்று  பெண் இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணி மாற்றமும் செய்து அதிரடி காட்டினார். இதில் வாணியம்பாடி இன்ஸ்பெக்டர் சாந்தியும் ஒருவர். இவருக்கு ஆளின் ஆளாகளாக இருந்து வந்தவர் தான் இந்த கண்ணகி. கண்ணகி சினிமா படங்களில் வரும் வில்லி பெண் போலீசை போல தான் நடந்து கொள்வாராம். கட்டிங் வாங்குவதில் வேலூர் மாவட்டத்தில் இவருக்கு நிகரான ஆள் யாருமே இல்லையாம்? பெயர் மட்டும் தான் கண்ணகி ஆனால் ஆளு ரொம்ப மோசமானவர் என்கின்றனர் அவருடன் பணியாற்றும் பெண் காவலர்கள்.

ஆலங்காயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரே ஒரு டாஸ்மாக் மதுபான கடை  மட்டும் இயங்கி வருகிறது. அந்த கடையை சுற்றி பத்துக்கும் மேற்பட்ட சால்னா கடைகள் உள்ளன. இந்த கடைகள் மாதம் ஒன்றிற்கு பத்ராசலத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய்  கட்டிங் தர வேண்டும். அப்படி  பத்ராவுக்கு கமிஷன் போகவில்லை என்றால் அடுத்த நாள் அந்த கடை அங்கு இருக்காது.                                         எஸ்.பி. ஆல்பர்ட் ஜான். ஐ.பி.எஸ்

அந்த சுற்று வட்டாரத்தில் பத்ராவின் பெயரை சொன்னால் சும்மா அதிரும் என்கிறார்கள் காக்கி சட்டைகள். அந்தப் பகுதியில் போலி மதுபான ஆலை செயல்பட்டு வருகிறது. பாண்டிச்சேரியில் இருந்து ஆர்.எஸ்.பவுடர் மற்றும் மூலப்பொருட்களை வாங்கி வந்து இங்கே உற்பத்தி செய்யப்படுகிறது. இது குறித்து பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும் பத்ரா உயர் அதிகாரிகளுக்கு அந்த புகார் போகாபடி தடுத்து நிறுத்திவிடுவார். அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்கும் வினோத், துரை ஆகிய இருவரும் ஆலங்காயம் பகுதியில் சாராயம் விற்பதில் நம்பர் ஒன் வியாபாரிகள்.இவர்கள் பத்ராவின் வலதுகரமாக இருந்து வருகிறார்கள். இவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல்  இருக்க மாதம் இவர்களிடம் இருந்து தல 20,000 வீதம் லஞ்சம் வாங்கிக் கொண்டு வருகிறார் பத்ரா. அதே போல அந்தப் பகுதியில் கார்த்திகா என்பவர் 24 மணி நேரமும் போலி மது விற்று வருகிறார். டாஸ்மாக் கடையில் மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து எடுத்து வரும் மது பானங்களை 24 மணி நேரமும் விற்பனை செய்து வருகிறார்.

                                                    டிஐஜி முத்துசாமி ஐ.பி.எஸ்

இவரிடம் இல்லாத மது வகைகளே இல்லை என்கிறார்கள் அந்த ஏரியா வாசிகள். இவர் பத்ரா என்கிற பத்ராச்சலத்திற்கு நெருங்கிய கூட்டாளி. பத்ரா சோர்வாக இருக்கும் போதெல்லாம் கார்த்திகா இருக்கும் ஏரியாவுக்கு அடிக்கடி வந்து போவாராம். அதே போல பெரிய வெள்ளை குட்டை பகுதியை சேர்ந்த அர்ஜுனன், குமார் இருவரும் சாராயத்தை குடிசைத் தொழிலாகவே செய்து வருகிறார்கள். இவர்கள் பத்ராவுக்கு ரொம்ப நெருக்கமானவர்கள்.  ஆலங்காயம் பகுதியில் 3 பள்ளிக்கூடங்களில் இயங்கி வருகின்றன. இதனால் மாணவர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.

நிம்மியம்பட்டு  கிராமத்தை சேர்ந்த சந்திப் என்பவர் பத்ராவுக்கு மாமுல் வாங்கித் தருவதை முழு நேர வேலையாக செய்து வருகிறார். அந்தப் பகுதியில் நடக்கும் பிராத்தல்,கள்ளச்சாராயம், சீட்டாட்டம், மண் கடத்தல், மணல் கடத்தல் என எல்லாவற்றிற்கும் கமிஷன் வாங்கி தரும் வேலை செய்து வரும் சந்திப்  பத்ராவின் மனசாட்சியாகவும் ஆலின் ஆளாகவும் செயல்பட்டு வருகிறார்.பத்ராவின் பர்சனல் செல் நம்பரில்  இருந்து தான் இவர்  சமூக விரோதிகளிடம் பேசுவார். அந்த நம்பரில் தான்  சாராய வியாபாரிகளும் இவரிடம் தொடர்பு கொண்டு பேசுவார்களாம். வெள்ளை குட்டை பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள்  மதன், வினோத், மகி என்கிற மகேந்திரன் இவர்கள் அனைவரும் பத்ராவின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள். பத்ரா யாரை சொல்கிறாரோ அவர்களை இவர்கள் அடிப்பார்கள்,உதைப்பார்கள். மகி என்கிற மகேந்திரன் பெரிய ரவுடி ஆனதற்கு காரணமே பத்ரா தான் என்கின்றனர் உள்ளூர் வாசிகள். அவர் சிறிய குற்றம் செய்யும்போதெல்லாம் அவர் மீது கடுமையான தண்டனை தராமல்அவரை கண்டித்திருந்தால் அவர் மாறி இருப்பார். மாறாக அவர் செய்யும் குற்றங்கள் அனைத்தையும் தட்டிகொடுக்கும் வகையில்  அவனை வளர்த்து விட்டதே இந்த கட்டிங் பத்ரா தான் என்கின்ளனர் ஏரியாவாசிகள். மாமல் வாங்கிக்கொண்டு விட்டதினாலே அவர் தற்போது பெரிய ரவுடியாக வளர்ந்து நிற்கிறார் என்கிறார்கள் உள்ளூர் வாசிகள்.

அந்த பகுதியில்  கஞ்சா வியாபாரிகள் எஸ்.எஸ்.ஐ பத்ராவுக்கு நெருங்கிய நண்பர்களாகவும் இருந்து வருகிறார்கள் நிம்மியம்பட்டு பணந்தோப்பில் கஞ்சா வியாபாரம் ஜோராக நடைபெற்று வருகிறது.  தனிப்பிரிவு எஸ்.ஐ-யாக இருக்கும் பத்ராச்சலம் ஆலங்காயம் காவல் நிலையத்திற்கு வரும் புகார்களையும் விசாரிப்பாராம். அது தவிர்த்து (D.D. CASE )களையும் பிடித்து விசாரிப்பாராம்  தனிப்பிரிவு எஸ்.எஸ்.ஐ. பத்ராச்சலம் சட்டம் ஒழுங்கு வேலைகளையும் பார்க்கிறாராம். ஆலங்காயம் பகுதியில் மட்டும் 40 இடங்களில் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறதாம்.

டி.ஐ.ஜி.யின் பெயரை பத்ராச்சலம் தவறாக பயன்படுத்துகிறாரா இல்லை டி.ஐ.ஜி. க்கும் இவருக்கும் உண்மையிலேயே தொடர்பு இருக்கிறதா என்று  டி.ஐ.ஜி. முத்துசாமி அவர்கள் தான் சொல்ல வேண்டும். இது தொடர்பாக டி.ஐ.ஜி. முத்துசாமி அவர்களை தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை. இது தொடர்பாக டி.ஐ.ஜி. முத்துசாமி அவர்கள் தனது தரப்பு கருத்தை தெரிவித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம். இனி மேலாவது பத்ராச்சலம் தனிப்பிரிவிலிருந்து மாற்றப்படுவாரா அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இதையும் படிங்க.!