chennireporters.com

#Sunil Kanukulu;பொய்களின் நாயகன் சுனில் கனுகுலு.

#exclusive story

#kongress #bjp #Sunil Kanukulu #Prashant Kishore #IAS officer Shashi Gandhi Senthil

சுனில் கனுகுலு இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கு தெரிந்த பெயர் இவர். ஒரு அரசியல் ஆலோசகராக அனைவருக்கும் தெரிந்தவர். வட இந்தியாவில் பிறந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்தவரை போல இந்தியா முழுவதும் உள்ள தொலைக்காட்சிகள் இவரை புகழ்ந்து செய்திகள் ஒளிபரப்பி வருகிறது.

 

சுனில் கனுகுலு

இப்படிப்பட்ட ஒருவர் பற்றிய செய்தி ஒன்று நமது அலுவலகத்திற்கு வந்தது. சென்னை தண்டையார்பேட்டையில் பிறந்து வளர்ந்த ஒருவரை பெரிய அரசியல் ஆலோசகர், பெரிய புத்திசாலி என்றெல்லாம் பேசுவது ஏற்புடையது அல்ல என்கின்றார் தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவர். தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் ரோடு 3-வது தெருவில் வசித்து வருகிறார்.

சுனில் கனுகுலு இவரது தந்தை பெயர் ரமணா, தாய் பெயர் சாந்தி, இவர் பிரசாந்த் கிஷோரிடம் உதவியாளராக வேலை பார்த்துள்ளார்.

லாஜிக்கே இல்லை.." காங்கிரஸ் கோட்டை விடுவது இங்கேதான்! ராகுலை விளாசிய பிரசாந்த் கிஷோர்! என்ன மேட்டர் | What is the biggest mistake of Congress explains Prashant Kishor ...

பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர் திமுகவிற்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரசியல் ஆலோசகராக பணியாற்றியபோது அவருக்கு எதிராக எடப்பாடி அணிக்கு தாவி அந்த கட்சிக்கு ஆதரவாக தேர்தல் வேலை செய்து கொடுத்தார். ஆனால் எதிர்பார்த்த இடங்களையும், எதிர்பார்த்த வெற்றியையும் எடப்பாடி அணியினரால் பெற முடியவில்லை. அதற்கு காரணம் இவரிடம் தனி திறமைகள் இல்லாமல் போனதே காரணம் என்கின்றனர் அதிமுகவை சேர்ந்த ஒரு முக்கிய விஐபி.

பிரசாந்த் கிஷோரிடம் இருந்து தொழிலை கற்றுக் கொண்ட சுனில் எதிர்பார்த்த அளவுக்கு அதிமுக அணைக்கு வெற்றியைத் தேடித் தர வில்லை.

விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலுக்கு காங்கிரசில் முக்கிய பதவி.. KS.அழகிரி அறிவிப்பு..! | Former IAS officer Sasikanth Senthil appointed Tamil ...

ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்

அதன் பிறகு கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு தனது பங்களிப்பை அளித்து வந்தார். ஆனால் ஏற்கனவே, அங்கு பாஜகவிற்கு எதிராக மக்களின் மனநிலை இருந்த காரணத்தினால் அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றது. அது தவிர ஐஏஎஸ் அதிகாரி சசி காந்தி செந்தில் புத்திசாலித்தனத்தால் புதிய அரசியல் திட்டங்களையும், அறிவிப்புகளையும் வகுத்துக் கொடுத்தார் அது தவிர அவர் ஏற்கனவே அந்த மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகவும் பணியாற்றியவர்.

 

 

கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் உடன் சுனில் கனுகுலு.

அதன் காரணமாகவே சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது அதன் காரணமாகவே காங்கிரஸ் மாபெரும் வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் தான் பெரிய ஜீனியஸ் என்பதைப் போல பத்திரிகையாளர்களை தன் கையில் வைத்துக்கொண்டு தன்னை பற்றி புகழ்ந்து செய்தி எழுத அவர் செய்த செயல்கள் பற்றி விரிவாக எழுதினால் நிலைமை மோசமாகிவிடும். தற்போது காங்கிரஸ் இன் ராகுல் காந்தி பயணத்தின் அனைத்து வேலைகளையும் இவர் தான் செய்து வருகிறார். இவர் ஏற்கனவே பாரத ஜோடோ யாத்திரை நிகழ்ச்சியிலும் இவரது பங்களிப்பு இருந்தது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் ஒருவருக்கு இவர்களது வார் ரூம் அணியினர் தேர்தல் வேலை செய்து கொடுத்தனர்.

சுனில் கனுகுலு

அதற்காக ஒரு கணிசமான பெரிய தொகையை அந்த தரப்பினரிடம் பெறப்பட்டது. ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. சென்னை தண்டையார்பேட்டையில் பிறந்து வளர்ந்த ஒருவர் தன்னை சென்னைக்காரர் அல்லது தமிழகத்தை சேர்ந்தவர் என்பதை மறைத்து வட இந்தியாவை சார்ந்தவர் என்று ஒரு முகமூடியை அணிந்து கொண்டு அரசியல் கட்சிகளை ஏமாற்றுவதற்கு என்ன காரணம் என்பதை சுனில் தான் விளக்க வேண்டும் என்கின்றனர் தமிழக அரசியல் கட்சியினர்.

இதையும் படிங்க.!