chennireporters.com

அம்பத்தூர் காவல் நிலையத்தில் காணமல் போன FIR.ன் மாயம் என்ன?

அம்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றில் பதிவு செய்யப்பட்ட  FIR காணாமல் போன சம்பவம் சென்னை போலிசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமியை மிரட்டிய வழக்கில் டுபாக்கூர் நீதிபதி கபிலர் என்பவர்  கடந்த பத்தாம் தேதி அரக்கோணத்தில் கைது செய்யப்பட்டார். இவர் தாம்பரத்தில் மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

கபிலர்

அவர் மீது கடந்த பத்தாம் தேதி குற்ற எண் 539/2022 வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த வழக்கு தொடர்பான எந்த ஆவணங்களையும் போலிசார் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை.

இந்த வழக்கு தொடர்பான கேஸ் டைரியும் காணாமல் போயுள்ளது . FIR போட்டு 8 நாட்கள் கழித்து காணாமல் போனது குறித்து அதிகாரிகள் யாரும் விசாரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த FIR ரை இன்ஸ்பெக்டர் ராமசாமி கிழித்துப் போட்டதாக சொல்கிறார்கள் சில காவலர்கள். ராமசாமிக்கு ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் உள்ள உளவுத்துறை அதிகாரி ஒருவரும் சில உயர் அதிகாரிகளும் பலத்த பாதுகாப்பு தருகிறார்களாம்.

அம்பத்தூர் காவல் நிலையத்தில் FIR காணாமல் போன விவகாரம் வடிவேல் காமெடி போலத்தான் தெரிகிறது என்கிறார்கள் சில காக்கிகள்.

படித்தவுடன் கிழித்து விடவும் என்ற வடிவேலின் காமெடியை ஞாபகப்படுத்துகிறது. இந்த சம்பவம்.  FIR போட்டு எட்டு நாள் கழித்து கட்டிங் வந்தவுடன்  கிழித்து போடும் பழக்கம் உள்ளவர் தான் ராமசாமி என்கிறார்கள்.

இதையும் படிங்க.!