chennireporters.com

கலெக்டருக்கு கூஜா தூக்கும் ஆவடி தாசில்தார் சிவக்குமார்.

பெயர் அளவில் மட்டுமே இயங்கி வரும் ஆவடி தாலுக்கா ஆபிசில் மக்கள் பணிகள் எதுவும் நடை பெறாமல் செவிடன் காதில் ஊதிய சங்கு போல அமைதியாக இருக்கிறார்கள் அதிகாரிகள்.

பணம் கொடுத்தால் மட்டும் அதிகாரிகளும்  கம்பியூட்டரும், சர்வரும் வேகமாக வேலை செய்கிறது என்கிறார் வழக்கறிஞர் சுகுமார். தனது கட்சிகாரர் பெயர் மாற்றம் செய்ய மனு கொடுத்து ஒரு வருடத்திற்கு மேலாகிறது என்கிறார்.

 

ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்ற செய்ய மனு அளித்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படுவதாக கண்ணீர் மல்க பெண் ஒருவர் அழுது புலம்பும்  காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில், சமீப காலமாக பட்டா தொடர்பான பணிகள் பயனாளிகளுக்கு  கொடுக்காமல் மெத்தனம் காட்டுவதாக  புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது பட்டா தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் அலைக்கழிக்கப்படுவதாக பெண் ஒருவர் கண்ணீர் மல்க பேசும் வீடியோ காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஆவடி வட்டத்திற்குட்பட்ட வெள்ளானூர் கிராமத்தைச் சேர்ந்த சுசிலா என்பவர் பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட மனுவின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல்

தான் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து கண்ணீர் மல்க பேசி இருந்தார்.

தற்போது அந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஆவடி தாசில்தார் சிவக்குமார்  தனக்கு வேண்டப்பட்ட  சர்வேயர் பாலமுருகன் சொல்லும் மனுக்கள் மீது மட்டுமே  பட்டா வழங்கி வருவதாக சில அதிகாரிகள் சொல்லுகிறார்கள்.

தாசில்தார் சிவகுமார், தலைமைசர்வேயர்அறிவழகன் , சர்வேயர் பாலமுருகன், தலைமையிடத்து துனை வட்டாச்சியர் ஜெயதேவி,  ஓட்டுனர் முருகன் ஆகியோர் சின்டிகேட் அமைத்து வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்த அணிக்கு தலைமை சர்வேயர் அறிவழகனே தலைமை தாங்கி வருகிறார்.

சின்டிகேட் தலைவர் அறிவழகன் பங்குகளை பத்திரமாக வைத்து கொள்ள நாகராஜன் என்பவரை பி.ஏ வாக வைத்துள்ளார் என்கின்றனர் கப்பம் கட்டியவர்கள்.

அறிவழகன் ரெட்டில்ஸ் அருகே உள்ள பாடியநல்லூர் பகுதியில் பல லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டி வருகிறார்.  இவருடைய சொத்து மதிப்பு சில கோடியை தாண்டும் என்கிறார்கள்.  திருவள்ளூர் மாவட்ட துனை இயக்குனர் சர்வே (A.D. SURVEY) ,ராமச்சந்திரன் நாயர்

ராமச்சந்திரன் நாயர்

என்பவர் பதவியில் இருந்த போது அவர் பல கோடி ரூபாய் மதிப்பில் திருவள்ளூரில் வீடு கட்டினார். அந்த வீடு கட்டுவதற்கு தேவையான அனைத்து செலவுகளையும் இந்த அறிவழகன் பார்த்து கொண்டாராம்.

அப்போது மாவட்டத்தில் உள்ள ஆனைத்து  சர்வேயர்களுக்கும்  அறிவழகன் வாட்ஸ் அப் மூலம்  தகவல் அனுப்பி பெரும் தொகையை வசூல் செய்து கொடுத்தார். அறிவழகன் பற்றி இன்னும் பல செய்திகளும் தகவலும் இருக்கிறது என்கிறார்கள் ஆவடி தாலுக்க ஆபிஸ் ஊழியர்கள் சிலர்.

ஆவடி தாசில்தார் சிவக்குமார் பற்றியும் அந்த அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் பற்றியும் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ் இதுவரை எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்கவில்லை.

அது தவிர வருவாய்த்துறை தொடர்பான வேலைகள் தாசில்தார் சிவக்குமாருக்கு சரிவர தெரியாது.

அவர் முதல்முறையாக தாசில்தாராக இங்கு பணிக்கு வந்துள்ளார்.

கலெக்டர் சொல்லும் வேலைகளை மட்டுமே அவர் செய்து தருகிறார் என்கிறார்கள்.

எதிர்க்கட்சியினர் சிலர் வெளிப்படையாகவே தாசில்தார் சிவக்குமார் இந்த பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று கலெக்டருக்கு கூஜா தூக்கி வருகிறார் என்றே சொல்லுகிறார்கள் .

உண்மையில் என்ன நடக்கிறது ஆவடி தாலுக்கா அலுவலகத்தில் என்பதை கலெக்டர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள்.

பட்டா கேட்டு மனு கொடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.

இதையும் படிங்க.!