chennireporters.com

அனுமதி இல்லாமல் இயங்கும் 200 கம்பெனிகள். நடவடிக்கை எடுக்காமல் “கல்லா கட்டி” காசு பார்க்கும் அரசு அதிகாரிகள்.

புழல் பகுதியில் அரசு அனுமதியும் அங்கீகாரமும் இல்லாமல் 200 க்கும் மேற்பட்ட  கம்பெனிகள் இயங்கி வருகிறது. மேலும் ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் கம்பெனிகள் மறுசுழற்சி செய்யாமல் கழிவுகளை வெளியேற்றுவதால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது பொதுமக்கள் சுவாச கோளாறால் பாதிக்கப்படுகின்றனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் சேர்ந்த விளாங்காடு பாக்கம் பஞ்சாயத்து மற்றும் சென்றம்பாக்கம் பஞ்சாயத்துகள் உள்ளடக்கிய பகுதியில் 200க்கும் மேற்பட்ட கம்பெனிகள் இயங்கி வருகின்றன.  அதாவது பிளாஸ்டிக் கம்பெனிகள், கெமிக்கல் குடோன்கள், ரைஸ்மில்கள் மற்றும் ரெடிமிக்ஸ் கம்பெனிகள் இயங்கி வருகின்றன.

இந்த கம்பெனிகள் தமிழக அரசின் தனியார் தொழிற்சாலை சட்ட விதிகளின்படி அனுமதி வாங்காமலும் கட்டிட  அனுமதி வாங்காமலும் இயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து புழல் ஒன்றியம் இரண்டாவது வார்டு  காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா மீரான் என்பவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆர்டிஓ, தாசில்தார், பி.டி.ஓ என அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நேரடியாகவும் தபால் மூலமாகவும் பல புகார்களை அளித்துள்ளார். ஆனால் இந்த புகார்கள் குறித்து இதுவரை அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மல்லிகா மீரான்

ஏற்கனவே மாவட்ட ஆட்சியராக இருந்த  ஆர் பி ஜான் வர்கீஸ் பல தனியார் கம்பெனி உரிமையாளர்களிடம் பெரும் தொகையை லஞ்சமாக பெற்றுக்கொண்டு எந்த நடவடிக்கை எடுக்காமல் தற்போது மாற்றலாகி சென்றுவிட்டார். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காத போது அதன் கீழ் பணியாற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்கிற கேள்வியை எழுப்புகிறார்கள் அந்தப் பகுதி பொதுமக்கள்.

ஆல்பி ஜான் வர்கீஸ் ஐஏஎஸ்

மேற்படி அனுமதி இல்லாமல் இயங்கும் கம்பெனிகளுக்கு பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் தொழில்வரி பலவகை வரி வீட்டு வரி என அனைத்து வரி ரசீதும் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக வழங்கி வருகின்றனர் மேலும் ஒரு கம்பெனி கட்டுவதற்கு குறிப்பிட்ட அளவு இடத்திற்கு அனுமதி வாங்கிவிட்டு கம்பெனி கட்டும்போது அதை விட கூடுதலான இடங்களில் கம்பெனியை கட்டி வருகின்றனர்.

அதாவது டிவேஷன் அதிக அளவில் நிறைய கம்பெனிகள் கட்டப்பட்டுள்ளன அல்ட்ராடெக், ப்ளாஸ்டிக், மற்றும்  கெமிக்கல்ஸ்  கம்பெனிகள், ரெடிமிக்ஸ் , வி.பி ரைஸ் மில் என பல முக்கிய கம்பெனிகள் அந்த நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை மறுசுழற்சி செய்யாமல் பொதுமக்களுக்கு நோய் பரப்பும் வகையில் அனைத்து முறைகேடுகளையும் செய்து வருகின்றனர்.

                                                   பிடிஒ சித்ரா

இது குறித்து புழல் பிடிஒ சித்ரா அவர்களிடம் காங்கிரஸ் கவுன்சிலர் மல்லிகாமீரான் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் குறித்து இதுவரை பி.டி.ஒ சித்ரா எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து நாம் சித்ராவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம்.

நாங்கள் மெல்லமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  உடனடியாக நான் எந்த விதமான நடவடிக்கையும் எடுத்து விட முடியாது என்றார்.  பொதுமக்களுக்கு உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஏன் செயல்படுகிறீர்கள் என்று கேட்டதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனக்கு முன்னால் பணியாற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்கள் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. நான் முறையாக நடவடிக்கை எடுக்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன் என்று தெரிவித்தார்.

நாம் குறிக்கிட்டு உங்கள் அலுவலகத்தில் உள்ள மற்ற அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சமாக பணம் பெற்று வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்ததற்கு எனக்கு அது பற்றி தெரியாது. இனிமேல் நான் எனது அலுவலக ஊழியர்களை லஞ்சம் வாங்குகிறார்களா என்று கண்காணிக்கிறேன் என்று  தெரிவித்தார்.இது குறித்து காங்கிரஸ் கவுன்சிலர் மல்லிகா மீரான் நம்மிடம் கூறுகையில் எங்கள் பகுதியில் உள்ள நிறுவனங்கள் முறையான அனுமதி பெறாமல் விதிமுறைகளை பின்பற்றாமல் கம்பெனிகளை இயக்கி வருகின்றனர். அந்த கம்பெனிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் எங்கள் பகுதி பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடும் மூச்சு திணறலும் ஏற்படுகிறது மேலும் தண்ணீர் மாசுபடுகிறது நிலத்தடி நீர் மிகவும் கெட்டுப் போய்விட்டதே பெரும் பேரிழப்பு ஏற்படுவதற்கு முன்னதாக அரசு அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக பொதுமக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார் .

 தமிழக தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா

மேற்படி கம்பெனிகள் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் வகையில் இயங்கி வருகிறது முறையான மின் இணைப்பும் இல்லாமல் திருட்டு மின்சாரமும் நிறுவனங்கள் பயன்படுத்தி வருகிறது எதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பும் ஏற்படுகிறது.

தற்போது புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

 

இதையும் படிங்க.!