chennireporters.com

பழங்குடி இன மக்களுக்கு உதவி செய்யும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்.

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள்; அப்படித்தான் இங்கு ஒரு சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது. சாதாரண குடும்பத்தில் பிறந்து படித்து உயர்ந்த பொறுப்பிற்கு வரும்பொழுது தான் கடந்து வந்த பாதையை மறந்து விடுகிறார்கள்.

இதற்கு எதிர்மறையாக தான் கடந்து வந்த பாதையை மறக்கவில்லை. தான் படித்து விட்டாலும் கூட என்னை சூழ்ந்து இருக்கிற வறுமையிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கி இருக்கிற சமூகத்திற்கு என்னால் முயன்ற வரையில் உதவி செய்ய வேண்டும் என்று ஒருவர் களமிறங்கி சத்தமில்லாமல் உதவி செய்து வருகிறார்.

திருவள்ளுவரை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவி திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் உள்ள பழங்குடி இன மக்களுக்கும், அதே போல் ஊத்துக்கோட்டை,  கருகம்பாக்கம் ஆகிய கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்களுக்கு 65 குடும்பங்களுக்கு அரிசி பருப்பு அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு துணிமணிகள் நோட்டுப் புத்தகங்கள் வழங்கினர்.

வழக்கறிஞர் ரவி அவர்களுடன் அவருடைய நண்பர்கள் பள்ளி கல்லூரி தோழர்கள் மற்றும் உயர்நீதிமன்றத்தில் உள்ள உதவும் மனம் கொண்ட சில வழக்கறிஞர்கள் பொருட்களாக வாங்கி சம்பந்தப்பட்ட மக்களுக்கு கொடுத்து உதவி வருகின்றனர்.

மேலும் அந்த மக்களுக்கு தேவையான ரேஷன் கார்டு, ஆதார் ,சாதி சான்றிதழ் என அரசு வழங்கும் அனைத்து  சான்றிதழ்களையும் வாங்கித் தரவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். நன்றாக படிக்கும் குழந்தைகளை தங்களுடைய செலவில் படிக்க வைக்கவும் இவர்கள் முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க.!