chennireporters.com

நீட் தேர்வு எதிரொலி மாணவி கனிமொழி தற்கொலை.

மாணவி கனிமொழி

அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

துவரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.இவரது மகள் கனிமொழி நாமக்கல்லில் உள்ள கிரீன் கார்டன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்தார்.அவர் தேர்வில் 562. 28 மதிப்பெண் பெற்றிருந்தார்.

இந்நிலையில் கனிமொழி இரண்டு தினங்களுக்கு முன் நடந்த நீட் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்.நேற்று முழுவதும் சோகமாக இருந்த கனிமொழி அப்பா கருணநிதியுடனே இருந்துள்ளார்.

இந்நிலையில் மாலை சுமார் ஆறு மணியளவில் கனிமொழி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை அடுத்து பெற்றோர் கனிமொழியின் உடலை சொந்த ஊரான சாத்தம்பாடி கிராமத்திற்கு எடுத்துச்சென்றனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை வருகின்றனர்.கனிமொழியின் தற்கொலைக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.நீட் தேர்வுக்கு தற்கொலை தீர்வாகாது.

இனிமேல் யாரும் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்று தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நீட் தேர்வை கண்டு மாணவர்கள் யாரும் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் கனிமொழி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு எதிராக தமிழக அரசு மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டுமென்று பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க.!