chennireporters.com

#bjp annamalai; அண்ணாமலை நடைபயணத்தில் பொதுமக்களிடம் செல்போன் பணம் கொள்ளையடித்த காவிக்கும்பல்.

பாஜக அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடை பயணத்தில் பொதுமக்களிடம் பணத்தையும் செல்போனையும் கொள்ளையடித்த காவி கும்பல் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

In jolt to Annamalai, HC dismisses his quash plea in hate speech case |  Chennai News - The Indian Express

என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு திருவள்ளூரில் நடை பெற்ற நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 2 லட்சம் ரூபாய் பணமும் செல்போன்களும் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் தொகுதியில் சி.வி நாயுடு சாலை, பஸ் நிலையம், தேரடி வழியாக பஜாரில் பாதயாத்திரை மேற்கொண்டார். அங்கு பொது கூட்டமும் நடைபெற்றது. அப்போது அவரை சுற்றி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என கூட்டம் இருந்தது.

கூட்ட நெரிசலில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் திருவள்ளூர் பாஜக நகர செயலாளர் சதீஷ் என்பவரிடம் 45 ஆயிரம் பணமும் நாகராஜ் என்பவரிடம் 52 ஆயிரம் பணமும், திருவள்ளூர் முரசு பத்திரிகையாளர் முருகன் என்பவரிடம் ரூபாய் இரண்டாயிரம் பணம் மற்றும் அவருடைய செல்போன், மேலும் சீனிவாசன் என்பவரிடம் 50,000, பழனி என்பவரிடம் 24 ஆயிரம் என பலரிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் பலரிடம் பணம் செல் போன் போன்றவை பிக்பாக்கெட் அடித்துள்ளனர்.

 

பணத்தை பறிகொடுத்தவர்கள் இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளனர். பொது மக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணாமலை நடை பயணத்தில் கூட்ட நெரிசலில் பலரிடம் செல்போன் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம்: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணத்தின்போது சென்னை – பெங்களூர்  தேசிய நெடுஞ்சாலையில் பாஜவினர் அலப்பறையில் ஈடுபட்டதால் கடும் ...

பொதுமக்களின் பணத்தை கொள்ளை அடித்தது காவி கூட்டமா அல்லது பிக்பாக்கெட் திருடர்கள் கூட்டமா என்பதை  போலீசார் விரைவில் கண்டுபிடித்து தர வேண்டும் என்று பணத்தை பறிகொடுத்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

அண்ணாமலை நடைபயணத்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு | Public welcome to  Annamalai

பணத்தை பறி கொடுத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாஜகவை  கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பொதுமக்களின் பணத்தை கூட்டத்தில் கொள்ளையடிக்கிற இந்த காவி கும்பலை கண்டா வரச் சொல்லுங்க இல்லையென்றால் கண்டுபிடித்தால் தகவலை சொல்லுங்க வெளுத்து வாங்குகிறோம் என்கின்றனர் பாதிக்கப்பட்ட பொதுமக்கள். ஏமார்ந்தவர்கள் பலர் தொடர்ந்து காவல் நிலையத்தில்  புகார் அளித்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க.!