திருவள்ளூர் அருகே கள்ளத்தனமாக மது விற்கும் தன் தாயின் மீது புகார் கொடுத்த மகன் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளத்தனமாக மது விற்பவரிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அராஜகத்தில் ஈடுபடும் புல்லரம்பாக்கம் போலீசார் மீது வடக்கு மண்டல ஐஜிக்கு புகார் அனுப்பியிருக்கிறார்கள் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் .
புல்லரம்பாக்கம் எம் ஜி ஆர் நகர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி இவர் அந்த பகுதியில் டாஸ்மாக் கடைகளில் கள்ளத்தனமாக மொத்த விலையில் மதுவை வாங்கி வந்து சில்லறை விலையில் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்து வருகிறார். இந்தப் பகுதியில் இவர் மது விற்பது புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் தெரியும்.
அவர்களுக்கு சரக்கு தேவைப்படும் நேரத்தில் சரக்கும் தினமும் கட்டிங் காசும் மாதா மாமுலும் பாப்பாத்தி இடம் வாங்கி வாங்கி செல்கின்றனர் கண்ணியம் மிக்க புல்லரம்பாக்கம் காவல் நிலைய காவலர்கள்.
ஆனந்த ராஜ்
இந்த நிலையில் தன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பட்டாபிராமிலிருந்து தனது அம்மா பாப்பாத்தி இடம் வந்த மூத்த மகன் ஆனந்தராஜ் கூலி வேலை செய்து வருகிறார். இவர் வீட்டிற்கு போகும்போது முகம் தெரியாத நபர்கள் தன் அம்மாவிடம் வந்து சண்டை போட்டு மது வாங்கிச் செல்வது இவருக்கு அறவே பிடிக்கவில்லை .
இது தொடர்பாக பலமுறை அவசர போலீசுக்கும் உள்ளூர் போலீசுக்கும் பலமுறை புகார் அளித்துள்ளார். மூன்று முறை நேரடியாகச் சென்று புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் தனது அம்மா பாப்பாத்தி மதுவிற்பது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
ஆனால் அந்த புகாருக்கு இதுவரை போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பத்தாம் தேதி தனது இறந்து போன இளைய மகன் தனசேகரின் மனைவி உஷா பெயரில் ஒரே பொய் புகாரை கொடுத்துள்ளார் பாப்பாத்தி. அதில் ஆனந்தராஜ் குடித்துவிட்டு வந்து அம்மா மற்றும் தம்பியின் மனைவி உஷாவை அடித்ததாகவும் அசிங்கமாக பேசியதாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அப்போது ஆனந்தராஜ் நீதிபதியிடம் நான் இவர்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் எனது அம்மா எனது தம்பியின் மனைவி உஷா அவரின் மகன் ஆகிய மூவரும் சேர்ந்து என்னை கடுமையாக தாக்கினார்கள் உடல் முழுவதும் எனக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அது தவிர சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பலமுறை புகார் வைத்திருக்கிறேன்.
அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை திட்டமிட்டு என் மீது பொய் புகார் பெற்று என்னை கைது செய்து இருக்கிறார்கள் என்று நீதிபதியிடம் ஆனந்தராஜ் முறையிட்டார். இதனை கேட்ட நீதிபதி சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணை அதிகாரியை நேரில் வரச் சொல்லி கடிந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் கூடுதலாக சில பொய்களைச் சொல்லி நீதிபதியை சமரசப்படுத்தி ஆனந்தராஜ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த செய்தி அந்தப் பகுதியில் பெறும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் உண்மை என்ன என்பதை தெரிந்தும் பணம் வாங்கிக் கொண்டு சாராயம் விற்கும் பெண்ணிற்கு சாதகமாக நடந்து கொண்டது கடும் கண்டனத்திற்குரியது என்கின்றனர் அந்த பகுதி பொதுமக்கள் .
இந்த நிலையில் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அம்பேத்கார் நகரில் சின்னப் பையன் என்பவரின் மகன் கிஷோர் கஞ்சா வியாபாரம் செய்து வருவதாக அந்தப் பகுதியை சேர்ந்த பலர் பலமுறை தொலைபேசி மற்றும் நேரிலும் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதே போல் அந்த பகுதியில் விநாயகம் மகன் வினோத் என்பவரும் கஞ்சா விற்பனை செய்து வருகிறார்
ஆனால் போலீசார் இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. அது தவிர அம்பேத்கர் நகரில் இன்னும் சில திமுக பிரமுகர்களின் மகன்களும் கஞ்சா விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் வீட்டில் சோதனை நடத்தினால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சா சிக்கும் என்கின்றனர் அந்த பகுதி பொதுமக்கள்.
இது தவிர ஈக்காடு ,ஈக்காடு கண்டிகை, ஒதிக்காடு, பூண்டி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனையும் கள்ளச் சந்தையில் மது விற்பதும் நடைபெற்று வருகிறது . இதன் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார் எல்லா கஞ்சா வியாபாரிகளிடமும் கமிஷன் வாங்கி வருகின்றனர் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்கிறார்கள் அதிமுகவினர்.
மாவட்ட தலைநகர் அருகிலேயே உள்ள காவல் நிலையத்தில் பல்வேறு சீர்கேடுகள் உள்ளன இந்த சீர்கேட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அந்த பகுதி மக்கள்.