சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் சங்கத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் ஒரு நூலகர் ,11 செயற்குழு உறுப்பினர்கள் என 16 பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கு வழக்கறிஞர்கள் பலர் பல பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர் .
இந்த நிலையில் தனது ஆதரவாளர்களிடம் தீவிரமாக போட்டியாளர்கள் வாக்கு சேகர் சேகரித்து வருகின்றனர்.
புதிய மாற்றத்தை விரும்பும் வழக்கறிஞர்களிடம் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேல்முருகன் அவர்கள் தேர்தல் வாக்குறுதிகள் அளித்திருக்கிறார். வழக்கறிஞர்களின் வாழ்வு மேம்பட நலன் காத்திடும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருக்கிறார் . அவை அனைத்தும் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
எதிர்த்தரப்பில் போட்டியிடும் தாமரை தரப்பு அணியினர் ஒரு வாக்கிற்கு ஐந்தாயிரம் ரூபாய் பணம் கொடுப்பதாக கூறப்படுகிறது. அது தவிர மற்ற உதவிகளும் செய்து தருவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேல்முருகன் தனது ஆதரவாளருடன் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.