திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் முடங்கிப் போய்விட்டது என்றே சொல்லலாம் கோடை காலத்தில் நிர்வாகம் எப்படி செயல்பட வேண்டும் என்று ஆட்சியர்கள் அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள்.
ஆனால் திருவள்ளூர் ஆட்சியர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ் செயல்படாத ஆட்சியராக பணியாற்றி வருகிறார் என்கிற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் சவுண்டு மண் குவாரி, செம்மண் குவாரி, மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.
அரசு நிர்ணயித்த ஆழத்தை விட அதிக அளவில் ஆடம் எடுக்கப்பட்டு மணல் குவாரிகள் மண் குவாரிகள் செயல்பட்டு வருகிறது அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை பயன்படுத்திக் கொண்ட மாவட்டத்தில் உள்ள மலை முழங்கி மாடுகள் தாசில்தார்கள் கல்லா கட்டி வருகிறார்கள்.திருவள்ளூர் தாசில்தார் மதியழகன், ஊத்துக்கோட்டை தாசில்தார், கும்மிடிப்பூண்டி தாசில்தார், திருத்தணி தாசில்தார் என குவாரிகள் செயல்படும் பகுதிகளில் உள்ள தாசில்தார்கள் குவாரி நடத்துபவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு விவசாயிகளின் வயிற்றில் அடித்து வருகிறார்கள்.
இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காத கலெக்டர் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார் எந்த அதிகாரிகள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவே இல்லை மாறாக ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பதைப் போல இரண்டு மூன்று பஞ்சாயத்து தலைவர்களின் தலைவர் பதவியை மட்டும் பிடுங்கிய கலெக்டர் அரசின் பணத்தை முழுமையாக கொள்ளையடிக்கும் பிடிஒக்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
நீதிமன்றம் தலையிட்டும் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளவர்களிடமிருந்து அரசு கைப்பற்றி பொது பாதை அமைத்து மக்களுக்கு பயன்பட வகையில் செயல்பட வேண்டும் என்று அளித்த உத்தரவை பயன்படுத்தாத தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை பல கிராமங்களில் குடிதண்ணீர் பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது.
சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் பழுது ஏற்பட்டுள்ளது. வேப்பம்பட்டு, பட்டாபிராம் போன்ற பகுதிகளில் உள்ள மேம்பால பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளது. பல கிராமங்களில் சமூக நலக்கூடங்கள் இல்லை அங்கன்வாடி பள்ளி கட்டிடங்கள் பாழடை ந்துள்ளது.
பல ஆண்டு காலமாக பூண்டி ஒன்றியம் இராமஞ்சேரி கிராமத்தில் இருந்த நல்ல தண்ணி கிணற்றை பஞ்சாயத்து தலைவர் தன்னுடைய அக்கா மகள் வீடு கட்டுவதற்காக குழி தோண்டி மூடி கிராம மக்கள் தண்ணீருக்கு பிச்சை எடுக்கும் அளவிற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத கலெக்டர் பேரளவில் மட்டுமே செயல்பட்டு வருகிறார் இதற்கு பதிலாக அரசு மாவட்ட ஆட்சியரை வேலையில்லாத ஒரு வேறொரு மாவட்டத்திற்கு மாற்றி பக்கத்து மாவட்ட ஆட்சியரை பகுதி நேரமாக திருவள்ளூர் மாவட்டத்தை நிர்வகிக்க அரசு உத்தரவிட வேண்டும் என்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.
அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது திருப்பத்தூர் மாவட்டத்தில், அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் விதமாக, கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கடைபிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள் தொடர்பாக 17 அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.
அதாவது குடிநீர் விநியோகம் வழங்குவதில் குறைபாடுகள் இருக்கக் கூடாது கிராமங்களில் வழங்கப்படும் குடிநீர் குடிக்க தக்க வகையில் இருக்க வேண்டும் .குடிநீர் ஆதாரத்தில் குறைவு ஏற்பட்டால் ஆழ்துளை கிணறு சீர் செய்யும் பணியினை ஊராட்சி பொது நிதி மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
குடிநீர் ஆதாரத்தினை மேம்படுத்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் எடுத்து வழங்க அறிவுரைகள் பின்பற்றப்பட வேண்டும். மார்க்கெட் மற்றும் சந்தை நடைபெறும் பகுதிகளில் தண்ணீர் வசதி உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
கிராம ஊராட்சிகள் தேவைப்படும் இடங்களில் கால்நடைகளுக்கு நிழல் தரும் கூறைகள் அமைக்கவும் கால்நடைகளுக்கு தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் சுகாதார துறையுடன் ஆலோசித்து பொதுமக்களுக்கு அனல் காற்று தாக்கம் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது மக்களுக்கு சூடான பானங்களை தவிர்த்து மோர், இளநீர், நீராகாரம், எலுமிச்சை சாறு முதலான குளிர்பானங்களை பருக விழிப்புணர்வு வழங்க வேண்டும்.
கிராம ஊராட்சிகள் தேவைப்படும் இடங்களில் தன்னார்வலர்கள் உதவியுடன் தண்ணீர் பந்தல் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். என்பன போன்ற அறிவுகளை வழங்கி இருக்கிறார்.
ஆனால் திருவள்ளூர் ஆட்சியர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ் இருக்கிறாரா என்றால் இருக்கிறார், இருக்கிறார் என்பதை பி ஆர் ஓ பத்திரிகைகளுக்கு அனுப்பும் செய்தி குறிப்பு மூலம் தான் தெரிந்து கொள்ளவேண்டும் ஆனால் கலெக்டரின் பணி எவ்வாறு இருக்கிறது என்பதை மாவட்ட மக்களிடம் கேட்டால்”” ஜீரோ, பூஜ்ஜியம், சுழியம் ”’என்று தான் சொல்ல வேண்டும்.