chennireporters.com

என் தலைக்கு பத்துகோடி தேவையில்லை. பத்து ரூபாய் போதும் ”சாமியாரை கலாய்த்த” உதயநிதி.

தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்த சாமியாருக்கு பதிலடி தரும் வகையில் 10 கோடி தேவை இல்லை பத்து ரூபாய் சீப்பு போதும் என்று கலாய்த்து தள்ளியுள்ளார் அமைச்சர் உதயநிதி.

ஜெய்ப்பூர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியாவுடன் சனாதனத்தை ஒப்பிட்டு அதனை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருப்பது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் மட்டுமல்லாமல் இந்து அமைப்புகளும், சாமியார்களும் கூட எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். உதயநிதியின் தலையை வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் தரப்படும் என உத்தரபிரதேசத்தில் பரமஹன்ச ஆச்சார்யா என்ற ஒரு சாமியார் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். 

ஆனால் உதயநிதியின் சனாதன எதிர்ப்பு பேச்சுக்கு நாடு முழுக்க  பாராட்டுகளும், கண்டனங்களும், எதிர்ப்பு குரலும் வலுத்து வருகிறது. இது தொடர்பாக சமூக வலைதள பதிவுகள் ஒருபக்கம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி, உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெரும்பான்மை மக்களோ, சிறுபான்மை மக்களோ அவர்களின் உணர்வுகள் புண்படும்படி நாம் பேசுவதை தவிர்க்க வேண்டும். உதயநிதி ஒரு ஜூனியர் அரசியல்வாதியாக இருக்கிறார். அவருக்கு இந்த விஷயங்கள் தெரியாமல் இருக்கலாம். அவர் பேசியதை நானும் கேள்விப்பட்டேன். ஆனால் எந்த அர்த்தத்தில் அவர் அப்படி பேசினார் எனத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும், அதுபோன்ற அவர் பேசியிருக்கக் கூடாது. அனைத்து மதங்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதே என் கருத்து” என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி  உதயநிதி ஸ்டாலினின் கருத்துகளைப் பொறுத்த வரையில், அவர் ஒரு இளையவர். என் தரப்பில் இருந்து, அவர் எதற்காக, எந்த அடிப்படையில் கருத்து வெளியிட்டார் என்பது எனக்கு தெளிவாகத் தெரியவில்லை. ஒவ்வொரு மதமும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்களை நான் மதிக்கிறேன். ஆனால் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் இருப்பதால் அனைவரையும் மதிக்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்.

 

அதே போல் காங்கிரஸ் கட்சியின்  கரண்சிங்கும் உதயநிதியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். துரஷ்டவசமான பேச்சு, அவற்றை துளியும் ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இதுதொடர்பாக, அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு என்றும் காங்கிரஸ் ஒரு நுணுக்கமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. காங்கிரஸின் இளம் தலைவர்களான பிரியங்க் கார்கே, கார்த்தி சிதம்பரம் போன்றோர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சனாதன தர்மம் பற்றி உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார்அதில், சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, அசோக் கெலாட் ஆகியோர் ஏன் மவுனம் சாதிக்கிறார்கள்? சனாதன தர்மம் குறித்து அவர்களின் கருத்து என்ன? சனாதன தர்மம் பற்றி உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் நாடு அவர்களை மன்னிக்காது.’இவ்வாறு அவர் பேசினார்.

 

அதே போல் பஞ்சாப் மாநிலம் ஹர்பன்ஸ்பூர் கிராமத்தில் நேற்று நடந்த ‘மேரி மாதி, மேரா தேஷ்’ நிகழ்வில் மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் பங்கேற்ற பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘சனாதன தர்மம் என்றும் நிலைத்திருக்கும். இந்துக்களை ஒழிக்க நினைத்தவர்கள்தான் ஒழிந்துவிட்டார்கள். ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள், நாட்டிடமும், இந்து சமூகத்தினரிடமும் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று சொன்னார்.

ஆக தேர்தல் நேரத்தில் இது தேவையற்ற பேச்சாக விமர்சிக்கப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க.!