chennireporters.com

பெரியாரின் சாதி எதிர்ப்பில் வளர்ந்தவள் நான் கவிதா ராமு ஐ.ஏ.எஸ். சுளீர்!

புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள கவிதா ராமு ஐ.ஏ.எஸ். தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடனம்தான் எனது தனித்த அடையாளம்.

எனது சாதி என் அடையாளமே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.

அதில் ஒன்றுதான் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் இதில் பல அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

41-வது ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட கவிதா ராமு ஐ.ஏ.எஸ். முன்னதாக மாநில ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனராக பணிபுரிந்தவர்.

இந்நிலையில் அவரின் புதிய பொறுப்பு குறித்து சமூக வலைதளங்களில் அவருக்கு பல தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கவிதா ராமு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் என்னுடைய பொறுப்பு குறித்து பலரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் உங்களின் அன்புக்கும் பாசத்திற்கும் நான் எப்போதும் கடைமை பட்டவளாக இருப்பேன்.

அதே வேளையில் என்னை குறிப்பிட்ட சாதி அடையாளம் கொண்ட பக்கங்களோடு சிலர் என்னை டேக் செய்கிறார்கள்.

என்னை முழுமையாக அறியாதவர்களுக்கு இதைச் சொல்ல நான் விரும்புகின்றேன் சமூக மலர்ச்சி இயக்கங்களுக்கு பெயர் போன மாநிலத்தை சேர்ந்தவள் நான்.

தனக்கு சமூக நீதிக் கருத்துக்கள் இன்னும் ஆழமாக பதிந்துள்ளது பெரியாரின் பகுத்தறிவு மற்றும் சீர்திருத்த சித்தாந்தங்களை கேட்டும் படித்தும் வளர்ந்தவள் நான்.

பெரியார் அறிவுறுத்திய சில கொள்கைகளை என் வாழ்க்கையில் செயல்படுத்துபவள்.

அதில் முக்கியமானது “சாதி எதிர்ப்பு” எனவே எந்த ஒரு அடையாளத்தில் இருந்தும் விடுபட்டு இருக்கும் என்னை நீங்களும் அப்படியே பார்க்க கேட்டுக்கொள்கிறேன்.

என்று கவிதா ராமு ஐ.ஏ.எஸ் சமூக வலைத்தளத்தில் கூறியிருக்கிறார்.

அடையாளங்கள் சுமையாகி விடுகின்றன சில அடையாளங்கள் மனித இனத்துக்கு எதிராக அமையும் வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

எனவே நடனம் ஒன்றை மட்டுமே என் தனித்த அடையாளமாக சொல்லிக் கொள்ள நினைக்கிறேன்.

சக மனுஷியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக நீதிக்கான பாதையில் என் சிறப்பான செயல்பாட்டை கொடுப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்.

பெண்ணுரிமைப் போராளி, மாமேதை சமூகப் போராளி,முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஊரில் ஆட்சியராக பணி புரிவதை பெருமையாக கருதுகிறேன் என்று கூறியிருந்தார்.

கவிதா ராமு ஐ.ஏ.எஸ் இன்றைய இளம் தலைமுறை பெண்களுக்கு ஒரு ரோல் மாடல் என்றால் அது மிகையல்ல.

இதையும் படிங்க.!