திருவள்ளூர் நகருக்கு திடீரென போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சைக்கிள் மூலம் வந்தார்.
திருவள்ளூரில் உள்ள தீயணைப்புத்துறை வீரர்களை சந்தித்து பேசினார்.அது தவிர திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அதே போல மகளிர் காவல் நிலையத்திலும் ஆய்வு செய்தார்.காவலர் குடியிருப்பில் உள்ள காவலர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
காவல் நிலையங்களில் உள்ள கோப்புகளை ஒழுங்காக பராமரிக்கிறார்களா என்றும் கணினி அறை இன்ஸ்பெக்டர் அறை கைதிகள் அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காவலர்களின் பணிகள் குறித்த விவரம் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர் வழிப்பறி செல் போன் பறிப்பு உட்பட குற்ற சம்பவங்கள் குறித்தும் காவல் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
காவலர் குடியிருப்பில் இருந்த குழந்தைகளிடம் சைலேந்திர பாபு கலந்துரையாடினார்.
குழந்தைகளுக்கு பிடிக்கும் விளையாட்டு தாங்கள் என்னவாக ஆக வேண்டும் என்பதையெல்லாம் கேட்டறிந்தார்.
அப்போது நீங்களும் ஐ.பி.எஸ். ஆகலாம் என்கிற சைலேந்திரபாபு எழுதிய புத்தகங்களை குழந்தைகளுக்கு வழங்கினார்.
மேலும் காவலர்களின் குழந்தைகள் விளையாடிய சிலம்பத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்த டிஜிபி அவர்களுக்கு ஊக்க பரிசுகளையும் வழங்கினார்.
பின்னர் அங்கிருந்து திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள பூண்டி நீர்த் தேக்கத்தை சுற்றி பார்ப்பதற்காக மிதி வண்டியிலேயே பூண்டிக்கு சென்றார்.
காவல் துறை இயக்குனர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நடத்திய இந்த திடீர் ஆய்வில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. வருண்குமார் கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து தனிப்பிரி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர் மூன்று நாட்கள் விடுப்பில் சென்றதால் டி.ஜி.பி. வரும்போது அவர் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது என்று தெரிவித்தனர்.ஆனால் உளவுத்துறையினர் ஒரு எஸ்.பி.
டி.ஜி.பி.க்கு தெரியாமல் விடுமுறையில் செல்ல முடியாது என்று பொறிவைத்துப் பேசுகின்றனர்.