chennireporters.com

தமிழிலும் பொறியியல் பாடங்கள் படிக்கலாம். ஏ.ஐ.சி.டி.இ தலைவர் தகவல்.

தமிழ் உட்பட எட்டு மொழிகளில் பொறியியல் பாடங்கள் மொழி பெயர்க்கப்படும் என்று ஏ.ஐ.சி.டி.இ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை தாய் மொழியில் பயில வேண்டும் என்று தேசிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது.

அதன்படி பொறியியல் தொழில்நுட்பம் சார்ந்த பாடத்தை தமிழ், பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தெலுங்கு ஆகிய எட்டு மொழிகளில் பேராசிரியர்களை கொண்டு மொழி பெயர்க்கப்
பட்டுள்ளது.

மொழிபெயர்ப்புப் பணி 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது.பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

மாணவர்கள் தாய்மொழியில் பொறியியல் பாடங்களைப் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க.!