chennireporters.com

கொடி நாள் வசூலில் சாதனை படைத்த” கட்டிங் ஆபிசர் மல்லிகேஸ்வரி”.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொடி நாள் வசூலில் சாதனை படைத்ததற்காக ஆவடி முன்னாள் சப்ரிஜிஸ்டர் மல்லிகேஸ்வரி உட்பட 11 அலுவலர்களுக்கு கலெக்டர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ் வெள்ளி பதக்கம்  வழங்கி பாராட்டு தெரிவித்தார்.மல்லிகேஸ்வரி விருது பெற்றது  தொடர்பாக அவருடன் பணியாற்றிய ஆவடி பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்கள் காரி உமிழாத கதையாக சொல்லுகிறார்கள்.  மல்லிகேஸ்வரியின் கொடிநாள் வசூல் செய்த சாதனையை தான் வேலை செய்த அலுவலகத்தில் 30 ரூபாய் பணம் கொடுத்து தண்ணி கேன் வாங்கி போட துப்பில்லாத மல்லிகேஸ்வரி  கொடிநாள் வசூலில் சாதனை படைத்ததாக கலெக்டர் பரிசு வழங்கியது வேடிக்கையாக உள்ளது என்கின்றனர் சக ஊழியர்கள்.அது தவிர கொடி நாள் வசூலில் வழங்கப்பட்ட  ஐந்து லட்சம் தொகையில் ஒரு ரூபாய் கூட மல்லிகேஸ்வரி தன்னுடைய சம்பளப் பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொடி நாள் வசூல் செய்ய  வழங்கப்பட்ட காலம் முழுவதும்  மல்லிகேஸ்வரி கடந்த இரண்டு  வருஷமாக போலி பத்திரங்களை பதிவு செய்ய வரும் நபர்களிடமிருந்து கொடிநாள் வசூலுக்கு  தனியா கல்லா கட்டினார். இவருக்கு வரவேண்டிய கட்டிங் போக கலெக்க்ஷன் செய்த்தாக சொல்லுகிறார்கள் ஆவடி பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்கள்.
தான் பணியாற்றிய அலுவலகத்தில் 30 ரூபாய்க்கு தண்ணீர் கேன் போட மனம் இல்லாத சுருட்டல் ராணி மல்லிகேஸ்வரிக்கு கொடி நாள் வசூல்  என்ற பெயரில்  கல்லா கட்டியது போக மீதி தொகையை தான் கலெக்டர் ஆபிசுக்கு தந்திருக்கிறார் என்கிறார்கள் சில அதிகாரிகள். மல்லிகேஸ்வரி  மீது பல்வேறு ஊழல் வழக்குகள்   வருமானத்திற்கு அதிகமாக சொத்து சம்பாதித்தது உள்பட பல புகார்கள் லஞ்ச ஒழிப்பு துறையில் நிலுவையில் இருக்கிறது. அது தவிற பல்வேறு அரசு நிலங்களை பத்திர பதிவு செய்துள்ளார். அரசு விதிமுறைகளுக்கு மாறாக பல விஷயங்களை செய்து கல்லா கட்டியுள்ளார்.இப்படி இவரின் சொத்து மதிப்பு பல கோடிகளை தாண்டும் என்கிறார்கள் இவருக்கு லஞ்சம் கொடுத்தபுரோக்கர்கள்.இருப்பினும் சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் பதிவுத்துறை அதிகாரிகளை பணிமாற்றம் செய்து அரசு உத்திரவிட்டது. இதில் மூன்றை ஆண்டுகளுக்கு மேலாக ஆவடியில் யாரும் அசைக்க முடியாத கல்லா கட்டிய ராணியாக வலம் வந்தார். இவருடைய சொத்து பட்டியலை பார்த்த பதிவுத்துறை அமைச்சரும் துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி ஐ.ஏ.எஸ் அதிர்ந்து போனார்களாம். கிறிப்பாக மல்லிகேஸ்வரி திருவள்ளீரில் கட்டியுள்ள சில கோடி மதிப்புள்ள வீட்டை பார்த்து இது வீடா இல்லை ஓட்டலா என்று கேட்டுஅதிர்ந்து போனார்களாம்.

மல்லிகேஸ்வரி நாகப்பட்டினத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து சென்னைக்கு வரும் முயற்சியில் கோடிகள் செலவானாலும் பரவாயில்லை எப்படியாவது சொந்த மாவட்டத்திற்கோ அல்லது சென்னைக்கோ பணி மாறுதல் பெற்று வந்து விட வேண்டும் என்று பல அரசியல் புரோக்கர்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறாராம் மல்லிகேஸ்வரி.

இதையும் படிங்க.!