chennireporters.com

#tiruvallur constituency; திருவள்ளூர் தொகுதியில் களம் இறங்கும் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ். ஓங்கும் “கை” பிரகாசிக்கும் சூரியன்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் சிட்டிங் எம்.பி ஜெயகுமாருக்கு பதில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலுக்கு காங்கிரஸ் கட்சி தலைமை சீட்டு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்.  

திருவள்ளூர் பாராளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக புதிய முகமாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் போட்டியிட இருப்பதாக காங்கிரஸின் டெல்லி வட்டாரம் தெரிவிக்கிறது.  கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கு பெரும் பாடுபட்டவர். காங்கிரசின் சமூக வலைதள ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றவர் 2009ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில்  இந்தியாவின் டாப்ராக ஒன்பதாவது இடத்தில் தேர்ச்சி பெற்று கர்நாடக மாநிலத்தில் தனது பணியை துவக்கியவர். அது தவிர பெல்லாரி ஷிமோகா, சித்ரதுர்கா, ராய்ச்சூர், தட்சிண கன்னடா போன்ற பகுதிகளில் சிறப்பாக பணியாற்றியவர். கர்நாடக மக்களின் அடிப்படை உரிமைகளை அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தவர் சசிகாந் செந்தில்.

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு திருவள்ளூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எம்பி யாக இருந்து வரும் டாக்டர் ஜெயக்குமார் தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியில் ஒன்றைக் கூட நிறைவேற்ற வில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது தான் சார்ந்த சமூக மக்களுக்கும் தான் சார்ந்த கட்சியினருக்கும் எந்தவித உதவிகளையோ தேவைகளையோ பூர்த்தி செய்ய  செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது பட்டாபிராம், வேப்பம்பட்டு, செவ்வாய்பேட்டை, போன்ற பகுதியில் உள்ள மேம்பால பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் ரயில்களில் ஒரு ரயில் கூட திருவள்ளூரில் இதுவரை நிறுத்தி எந்த விதமான பணிகளையும் அவர் மேற்கொள்ளவில்லை. அது தவிர மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இதுவரை  தனக்கு அலுவலகத்தை ஏற்படுத்தவே இல்லை என்கிற குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியினர் வைக்கின்றனர். அது தவிர அரசியலில் எந்தவித அனுபவம் இல்லாத  துரை சந்திர சேகருக்கு பொன்னேரி தொகுதிக்கு அறிமுகம் இல்லாத  துரை சந்திர சேகர் என்ற நபருக்கு எம்எல்ஏ சீட்டு வாங்கி கொடுத்ததில் நடந்த பின்னணி ரகசியங்கள் என்ன என்கிற குற்றச்சாட்டை வைக்கின்றனர். மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் அரசு கல்லூரி அரசு பள்ளிக்கூடம் எதுவும் இதுவரை இவர்  ஏற்படுத்தி தரவில்லை.

தனது கட்சி நிர்வாகிகளுடன் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்.

திருவள்ளூர் திமுகவினர் தங்களது தலைமைக்கு தொகுதியின் நிலை பற்றி கொடுத்துள்ள ரிப்போர்ட்டில் மீண்டும் இந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கினால் ஜெயிக்காது இல்லையென்றால் ஏற்கனவே  வெற்றி பெற்றுள்ள ஜெயக்குமாருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் காங்கிரஸ் தோற்றுவிடும் என்று மாவட்ட  உள்ள திமுகவினரும்,  திமுக எம்எல்ஏக்களும் ஒருமித்த குரலில் ஜெயக்குமாருக்கு எதிராக திமுக தலைமைக்கு புகார் கடிதம் எழுதியுள்ளனர். அது தவிர காங்கிரஸ் கட்சியினரும் டெல்லி மேலிட பொறுப்பாளர்களுக்கும் மல்லிகார்ஜுன கார்கே, கேகே வேணுகோபால் ராகுல் காந்தி போன்ற தலைவர்களுக்கும் புகார் கடிதம் எழுதியுள்ளனர்.

சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்..

ஜெயக்குமார் தேர்தலில் வெற்றி பெற காரணமாக இருந்த பலரை வெற்றி பெற்ற பிறகு அமைதிப்படை அமாவாசை போல நடந்து கொண்டார் என்கின்றனர் கதர் சட்டைக்கார ர்கள். அவர் கமிஷன் வாங்காமல்  காண்ட்ராக்ட் எதையும் ஒதுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை அவரது கட்சியினர் வைக்கின்றனர். மாவட்டத்தில் தலித் சமுதாயம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் சமுதாயக் கூடத்தை அமைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர். எனவே இந்த முறை அவருக்கு சீட்டு வழங்கக் கூடாது என்பதில் திமுக கூட்டணியில் அங்கும் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் ஜெயக்குமாருக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.

சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்..

இந்த நிலையில் புதிய முகமான கர்நாடக தேர்தலில் வெற்றிக்கு பாடுபட்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் தான் களத்தில் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சசிகாந்த் செந்தில்  திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். அவரது தந்தை சண்முகம் மாவட்ட நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் . அவரது அம்மா அம்பிகாவுக்கு பூர்வீகம் பெருமாள் பட்டு தான் பெருமாள்பட்டு  சுற்றியுள்ள பகுதிகளிலும் திருவள்ளூர், வெள்ளவேடு, பூந்தமல்லி, புழல், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை , ஆவடி, அம்பத்தூர் போன்ற பகுதிகளில் சசிகாந் செந்திலுக்கு நெருக்கமான உறவினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்..

எனவே அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதனால் தற்போது சசிகாந்த் செந்தில் முகம்  தொகுதியில் அறிமுகம் இல்லை என்றாலும் கூட  தனது உறவினர்கள் மற்றும் திமுக கூட்டணியினர் சசிகலா செந்தில் போட்டியிடுவதை விரும்புகின்றனர். எனவே அவர் எளிதில் வெற்றி பெற்று விடுவார் என்கிற பேச்சு தற்போது எழுந்துள்ளது. எனவே தற்போது திருவள்ளூர் தொகுதியில் காங்கிரசின் கை ஓங்குகிறது என்றும் சூரியன் பிரகாசமாக உதிக்கும் என்கின்றனர்.

ஜெயக்குமார் சார்ந்து இருக்கிற சமுதாய மக்களுக்கும் ஒன்றும் செய்யவில்லை. தான் சார்ந்த கட்சிக்கும் ஒன்று செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது தவிர தனது கட்சியினரோ தனது சமூகத்தினரோ உதவி கேட்டு அவரது வீட்டுக்கு சென்றால் 100 கேள்விகளைக் கேட்டு ஒருமையில் பேசி மிக தரம் தாழ்ந்த வகையில் நடந்து கொள்வார் என்கிற பேச்சு தொகுதி முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அது தவிர தான் படித்த படிப்பிற்கு ஏற்ற மாதிரி ஒருபோதும் அவர் நடந்து கொள்ளவில்லை எந்த விழாவாக இருந்தாலும் தான் படித்து வாங்கிய அனைத்து பட்டங்களையும் நோட்டீசிலும் பேனரிலும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்துவாராம் அப்படி போடாதவர்களை பொது இடங்களில் அசிங்கபடுத்தும் வகையில் ஒருமையில் பேசுவாராம்.

சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்..

கூட்டணி கட்சியினரை குறிப்பாக திமுகவினரை காரி துப்பாத குறையாக பேசுவாராம். போய் வேலையை பாரு எனக்கு ஸ்டாலினையே தெரியும் என்பாராம். மாவட்ட முழுவதும் திமுக கூட்டணி கட்சியினர் சமூதாய மக்கள் மற்றும் பல பிரிவை சேர்ந்தவர்கள் என அனைத்து தரப்பினரும்  ஜெயக்குமாருக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர்.

சசிகாந்த் செந்திலுக்கு காங்கிரஸ் மேலிடம் சீட்டை ஒதுக்கினாலும் கூட தேர்தல் பிரச்சாரத்திற்கோ ஓட்டு கேட்கவோ தொகுதி பக்கமோ ஜெயக்குமார் தலை காட்டினால் சசிகாந்த் செந்திலுக்கு அது பெரும் இழப்பை ஏற்படுத்தும் எனவே ஜெயக்குமார் முகம் காட்டாமல் ஒதுங்கி நின்றால் காங்கிரஸ் அந்த இடத்தில் மாபெரும் வெற்றியைப் பெறும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை என்கின்றனர் உடன் பிறப்புக்கள்.

இதையும் படிங்க.!