பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்.

July 5, 2021

By தே. ராதிகா

தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் தே.மு.தி.க சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் தோறும் தே.மு.தி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த இந்த போராட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் சைக்கிள் ஓட்டி பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இதில் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதா மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Share:

தே. ராதிகா

July 5, 2021

Leave a Comment